அனல் பறந்த ஜம்மு காஷ்மீர்: 370-வது சட்டப் பிரிவு ரத்து வழக்கு- நீதிபதிகள் கேள்விகள்- வாதங்கள் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்துஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. 370-வது பிரிவு ரத்து செல்லும்; ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்விகள்:

1) ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கு யார் பரிந்துரைத்தது?
2) அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு தற்காலிகமானது என குறிப்பிடும் போது அது எப்படி நிரந்தரமான ஒன்றாக இருக்க முடியும்?
மத்திய அரசின் வாதம்:
நாடு விடுதலையின் போது ஜம்மு காஷ்மீரைப் போல பல சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. நாடு பிரிவினையின் போது பின்னரும் இப்படி சுதேச அரசுகள் நிபந்தனையுடன் இணைந்தன. ஆனால் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான இணைந்துவிட்ட பின்னர் இந்த நிபந்தனைகள் அர்த்தமற்றவை. 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான்; அதை எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது
அரசியல் சாசனத்தின் முகப்புரையானது சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை இல்லாமல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான்; மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே. 1964-ம் ஆண்டே ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்க கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாம வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது ஒரு யூனியன் பிரதேசமாக்கப்பட்டிருப்பது தற்காலிகமானது. விரைவில் முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுவிடும்.
370-வது பிரிவு ரத்துக்குப் பின்னர் அதாவது 2019-க்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் கணிசமான அளவு வன்முறைகள் குறைந்துவிட்டன. ஜம்மு காஷ்மீரில் முழுமையான அமைதி திரும்ப் இருக்கிறது.
மனுதாரர்கள் வாதம்:
5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி கிடையாது. அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கு முன் அம்மாநில சட்டசபை முடக்கப்பட்டது. இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.
370-வது பிரிவு என்பது தொடக்கத்தில் தற்காலிகமானதாகவே இருந்தது. ஆனால் அரசியல் சாசன நிர்ணயசபை கலைக்கப்பட்ட பின், 370-வது பிரிவு என்பது நிரந்தரமானதாகிவிட்டது.
370-வது பிரிவை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அரசியல் சாசனத்தின் 354-வது பிரிவு நாடாளுமன்றத்துக்கான அதிகாரம் போதாது என்கிறது.
அரசியல் சாசனத்தின் 370-ன் 3-வது பிரிவானது, 370-வது பிரிவை ரத்து செய்ய அரசியல் சாசன சபையின் பரிந்துரை அவசியமானது. அரசியல் சாசன சபை கலைக்கப்பட்ட நிலையில் 370-வது பிரிவை ரத்து செய்ய முடியாது. அரசியல் சாசன சபையின் பரிந்துரையைப் பெற்றுதான் 370-வது பிரிவை ரத்து செய்யவே முடியும்.
அதேபோல சட்டசபையின் பரிந்துரை இல்லாமல் 370-வது சட்டப்பிரிவை ஜனாதிபதியால் ரத்து செய்ய முடியாது. இதற்காகவே வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் செல்லும் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications