35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்குப் பதிவு- தேர்தல் ஆணையம் ஹேப்பி!
டெல்லி: 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மிக அதிகமான வாக்குப் பதிவு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் வரலாற்றில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீரில் தான் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் முழு யூனியன் பிரதேசத்திலும் (5 மக்களவைத் தொகுதிகள்) 58.46% அளவிற்கு வாக்குப்பதிவு நடந்தது . இந்தக் குறிப்பிடத்தக்கப் பங்கேற்பு இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களின் வலுவான ஜனநாயக உணர்வு மற்றும் குடிமை ஈடுபாட்டிற்கு ஒரு சான்றாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் யூனியன் பிரதேசத்தில் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக வாக்குச்சாவடிப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்தார். "இந்த சாதனை 2019-ம் ஆண்டு முதல் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 25% அதிகரிப்பு, சி-விஜில் புகார்கள் மற்றும் பேரணிகளுக்கான 2455 கோரிக்கைகள் இடம் பெற்றுள்ள சுவிதா இணையதளம் ஆகியவை தயக்கமின்றி தேர்தல் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.
இந்தத் தீவிர பங்கேற்பு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பெரிய சாதகமாகும், இதனால் யூனியன் பிரதேசத்தில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வளரும் என்று அவர் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் 50.86% வாக்குகள் பதிவாகியிருப்பது ஜனநாயக நடைமுறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எதிரொலிக்கிறது. வாக்களிப்பு சதவீதம் 2019 -ம் ஆண்டு 19.16% ஆக இருந்த நிலையில் அது 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக்-ரஜௌரி ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் முறையே 38.49%, 59.1% மற்றும் 54.84% அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் மிக அதிகமாகும். யூனியன் பிரதேசத்தின் மற்ற இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளான உதம்பூர் மற்றும் ஜம்முவில் முறையே 68.27% மற்றும் 72.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications