ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்த மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது பஹல்காமில் நடந்த தாக்குதலை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் கள எதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது. அதோடு வழக்கு தொடர்பாக 8 வாரத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஆர்ட்டிகிள் 370யை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து நீக்கப்பட்டடு ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2023 டிசம்பர் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் 2024 செப்டம்பர் மாதத்துக்கு சட்டசபை தேர்தலை நடத்தி மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சட்டசபை தேர்தல் முடிவடைந்து விட்டது. உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார். இருப்பினும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கல்வியாளர் ஜஹூர் அகமது பட் மற்றும் சமூக ஆர்வலர் குர்ஷைத் அகமது மாலிக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‛‛ஜம்மு காஷ்மீர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக செயல்பட்டு வருகிறது, இது ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு பல தடைகளையும் பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதித்துள்ளது.
இதனால் 2 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தில் குறைவு ஏற்படும். இது இந்திய அரசியலமைப்பு மற்றும் கூட்டாச்சி கொள்கைக்கு எதிரானது.
ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வன்முறை இன்றி அமைதியாக பாதுகாப்பான முறையில் நடத்தப்ட்டுள்ளது. இப்போது தடுக்கும் பாதுகாப்பு கவலைகள், வன்முறை அல்லது வேறு எந்த இடையூறுகளும் இல்லை. எனவே, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், ‛பஹல்காம் தாக்குதலை கருத்தில் கொள்ள வேண்டும். கள எதார்த்தத்தை புறக்கணிக்க முடியாது. அதனை கருத்தில் கொள்ள வேண்டும்'' என்று கூறியது. மேலும் இந்த விவகாரத்தில் 8 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications