Flash Back:ஜவஹர்லால் நேரு முதன் முதலாக டிவிக்கு பேட்டி கொடுக்க காரணம் எலிசபெத் ராணி முடிசூட்டு விழா!
டெல்லி: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு முதன் முதலாக டிவி சேனலுக்கு பேட்டி தரும் வாய்ப்பை வழங்கியது இன்று காலமாகிவிட்ட பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாதான்!
பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் மகாராணி 2-ம் எலிசபெத் வயது முதுமையால் காலமாகிவிட்டார். 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக ஆட்சி செய்தவர் இரண்டாம் எலிசபெத். உலகில் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த பெருமைக்குரியவர்.
பிரிட்டன் மகாராணியாக ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவுக்கு 3 முறை வருகை தந்தார் 2-ம் எலிசபெத். அதற்கு முன்னதாக 1953-ம் ஆண்டு ஜூன் மாதம் எலிசபெத் மகாராணி முடிசூட்டிக் கொண்டார். அப்போது லண்டன் சென்றார் பண்டித ஜவஹர்லால் நேருநேரு. அவருடன் மகள் இந்திரா காந்தியும் லண்டன் சென்றிருந்தார்.

நேருவின் இந்த பயணத்தின் போது பிபிசி தொலைக்காட்சி அவரை பேட்டி கண்டனது. பண்டித ஜவஹர்லால் நேரு டிவி ஒன்றுக்கு முதன் முதலாக அளித்த பேட்டியும் அதுதான். அண்மையில் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிபிசி குழுமம், நேருவின் இந்த பேட்டியை மீள் ஒளிபரப்பு செய்தது.
அப்பேட்டியில் நேரு கூறியிருந்ததாவது: , தொலைக்காட்சியைப் பற்றி நான் கேள்விப்பட்டதைத் தவிர அதுகுறித்துக் கொஞ்சம் தான் தெரியும். மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு நான் இங்கே வந்தபோது விமர்சனம் இருந்தது. திரும்பிச் செல்லும்போதும் இருக்கும். அதில் சந்தேகமில்லை. ஆனால் மிகவும் அதிகளவு விமர்சனம் இருக்கும் என தோன்றவில்லை. இவ்வாறு அந்த பேட்டியில் பண்டித ஜவஹர்லால் நேரு கூறியிருந்தார்.
அதன்பின்னர் 1961-ம் ஆண்டு இந்தியா வந்த எலிசபெத் மகாராணி, பிரதமர் நேருவை சந்தித்தார். சென்னையில் பெருந்தலைவர் காமராஜரையும் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் இருந்தார். இந்த சென்னை பயணத்தின் போது மகன் ஆண்ட்ரூவின் முதல் பிறந்த நாளை சென்னையில் முதல்வராக இருந்த காமராஜர் முன்னிலையில் எலிசபெத் மகாராணி கேக் வெட்டி கொண்டாடினார். 1983-ம் ஆண்டு மீண்டும் இந்தியா வருகை தந்த போது நேருவின் மகள், இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். 1997-ல் ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன், பிரதமராக குஜ்ரால் இருந்த போது 3-வது முறையாக இந்திய பயணம் மேற்கொண்டார் எலிசபெத்.












Click it and Unblock the Notifications