ஜார்கண்டில் ட்விஸ்ட்.. பாஜகதான் ஆட்சி அமைக்கும்.. ஜேஎம்எம் - காங் வாய்ப்பில்லை.. சிஎன்என் நியூஸ்18
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என கணித்துள்ளது. ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களுக்கான தேர்தல் நடந்துள்ளதால், இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது.

ஜார்கண்டில் இந்த முறை வென்றே ஆக வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அதேபோல, கடந்த முறை பறித்த வெற்றிக் கனியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி.
ஜேஎம்எம் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளன. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்றும் (நவம்பர் 20 ஆம் தேதி) நடந்துள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றன. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஜேஎம்எம் மீண்டும் ஆட்சியில் அமருமா அல்லது பாஜக ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி, சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 45 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 33 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சிஎன்என் நியூஸ் 18 கருத்து கணிப்பின்படி, 45 இடங்களுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீப்பிள் பல்ஸ் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 44 முதல் 53 சீட்டுகளையும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 சீட்டுகளையும், மற்றவை 5 முதல் 9 சீட்டுகளையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிஎன்என் நியூஸ் 18 மற்றும் பீப்பிள் பல்ஸ் கருத்து கணிப்பின்படி, பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications