இந்து, கிறித்துவ மதங்களிலும் 'ஜிகாத்' இருக்கிறது - சிவராஜ் பாட்டீல் கருத்தால் புதிய சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இஸ்லாத்தில் மட்டுமல்ல.. இந்து, கிறித்துவ மதங்களிலும் 'ஜிகாத்' இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டில் சமீபகாலமாக இந்து - முஸ்லிம் மதங்களை சம்பந்தப்படுத்தி வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரித்து வருகின்றன. மதங்களை பற்றி கூறப்படும் கருத்துகள், பெரும் சர்ச்சைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

இதுபோன்ற சூழலில், சிவராஜ் பாட்டீலின் 'ஜிகாத்' குறித்த பேச்சு பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. மேலும், பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளும், அமைப்புகளும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

'ஜிகாத்' என்றால் என்ன?

'ஜிகாத்' என்றால் என்ன?

இஸ்லாத்தை பொறுத்தவரை, ஜிகாத்துக்கு பல்வேறு அர்த்தங்களும், பொருளும் இருக்கின்றன. உதாரணமாக, தனது தாய் - தந்தையரை கடைசிக் காலம் வரை எந்தக் குறையும் இல்லாமல் பிள்ளைகள் பேணி பராமரிப்பதும் 'ஜிகாத்' என சொல்லப்படுகிறது. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்வதும் இஸ்லாத்தில் ஒரு வகை ஜிகாத் தான். அதேபோல, எதிரிகளை எதிர்த்து போராடுவதும் ஜிகாத் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், தற்போது ஜிகாத் என்றாலே ஆயுதம் ஏந்தி போரிடுதல் என்ற பொதுவான கருத்து உள்ளது.

சிவராஜ் பாட்டீல் பேச்சு

சிவராஜ் பாட்டீல் பேச்சு

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் சிவராஜ் பாட்டீல் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஜிகாத் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது: நீங்கள் நல்ல நோக்கத்தை கருத்தில்கொண்டு சரியான செயல்களை செய்த போதிலும், யாரும் அதை புரிந்துகொள்ளாமல் உங்களுக்கு எதிராக செயல்பட்டால் நீங்கள் உங்கள் வலிமையை பயன்படுத்தலாம் என்பதே 'ஜிகாத்' ஆகும். அதன்படி பார்த்தால், ஜிகாத் என்பது குரானில் மட்டுமல்ல. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையிலும், கிறிஸ்தவ மதத்திலும் கூட உள்ளது.

'பகவத் கீதையிலும் உள்ளது'

'பகவத் கீதையிலும் உள்ளது'

மகாபாரதத்திலும், பகவத் கீதையிலும் பகவான் கிருஷ்ணன், ஜிகாத்தை பற்றி பேசியிருக்கிறார். ஒரு விஷயத்தை தெளிவாக எடுத்துக்கூறியும் அதை சிலர் புரிந்துகொள்ளாத போது, நமது வலிமையை பயன்படுத்தலாம் என்பதே ஜிகாத் ஆகும். அப்படியென்றால், அதைத்தான் மகாபாரத்தில் பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு போதித்திருக்கிறார். அதேபோல, கிறிஸ்தவத்திலும் ஜிகாத் இருக்கிறது. "நான் அமைதியை போதிப்பதற்காக வரவில்லை. ஆனால் ஒரு வாளுடன் வந்துள்ளேன்" என இயேசு கிறிஸ்து சொல்வதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிவராஜ் பாட்டீல் கூறினார்.

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

இதனிடையே, சிவராஜ் பாட்டீலின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், "இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு அதன் மூலமாக வாக்குவங்கி அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. அந்த வகையில், பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஜிகாத்தை போதித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் தற்போது கூறியிருக்கிறார். இது இந்துக்களை அவமதிக்கும் செயல். இதற்கு முன்னரும், காங்கிரஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் 'இந்து தீவிரவாதம்' என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறது. ராமர் கோயிலை எதிர்த்திருக்கிறது. 'ராமர் என்ற ஒருவர் இருந்தாரா?' என கேள்வி எழுப்பியிருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+