வாய்ப்பில்லை ராஜா..காசில்லைனா கல்யாணம் கிடையாது? 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஷாக் நியூஸ்..வீடியோவை பாருங்க
டெல்லி: நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளும் அவற்றில் இறுதியில் வழங்கப்படும் தீர்ப்புகளும் சமூகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். சில ஆச்சரியத்தை தரும், சில அதிர்ச்சியை தரும். அப்படி ஒரு நீதிமன்ற விவாதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. வருமானம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லை என நீதிபதி ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்தியா போன்ற கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் திருமணம் என்பது மிக முக்கியம். வயது வந்த இருவருக்கு மணம் முடிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கிடையான அன்பு, நேர்மை, ஒருவருக்கொருவரான ஆதரவு ஆகியவை இந்திய பாரம்பரிய திருமணத்தின் அங்கங்களாக இருக்கிறது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அன்பு, நேர்மை மட்டும் போதுமா? திருமணத்திற்கு முன்னர் நிதி நிலைமை உறுதிப்படுத்தப்பட வேண்டாமா? என்பன குறித்த பல்வேறு கேள்விகள் எழுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு விவாதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது நீதிபதிக்கும் வழக்குதாரருக்கும் இடையே நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு இளைஞர் தனது திருமண விவகாரம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நீதிபதி அவரிடம்," உங்களுக்கு வேலை இருக்கிறதா?" என கேட்கிறார். அப்போது," இல்லை, ஆனால் நான் மருத்துவராக அவ்வப்போது பணியில் இருப்பேன்" என கூறுகிறார்.
" உங்களுக்கு வருமானம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள எந்த உரிமையும் இல்லை. அவ்வப்போது வேலை, வருமானம் ஆகியவை வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் மருத்துவராக நீங்கள் வேலை செய்து வருமானம் ஈட்டியே ஆக வேண்டும். அதனால், நீங்கள் திருமணம் செய்ய உரிமை இல்லை என கூறி இருக்கிறார். தற்போது இந்த உரையாடல் தான் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Why did you get married without any income? pic.twitter.com/iwqf0K5Sea
— ShoneeKapoor (@ShoneeKapoor) April 1, 2025
திருமணத்திற்கு முன் நிதி நிலைமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமா? அல்லது ஒருவருக்கு ஒருவர் இடையேயான புரிதல் அவசியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. திருமணமான ஒருவர் தனது வருமானத்தை இழந்தால் அவர் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்ற நபராக மாறிவிடுகிறாரா? என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொரு நபரோ, "வருமானம் பற்றியே நீதிபதி அவரிடம் கேள்வி கேட்கிறார். ஆனால் அவரை திருமணம் செய்த பெண்ணிடம் இதைப் பற்றி கேட்கவில்லை. திருமணத்திற்கு பிறகு நிதி நிலையை சமாளிப்பதில் கணவன் மனைவி ஆகிய இருவருக்குமே பொறுப்பு உண்டு" என கமெண்ட் செய்து இருக்கிறார்.
திருமணத்திற்கு வருமானம் கட்டாயமா? சட்ட ரீதியாக எந்த நிபந்தனை உள்ளது? என சட்ட ரீதியான கேள்வி எழுந்துள்ள நிலையில், எந்த நாட்டிலும், ஒருவருக்கு நிலையான வருமானமில்லையென்றால் திருமணம் செய்யக் கூடாது என சட்டத்தில் உள்ளதா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். "ஒரு நபர் திருமணம் செய்ய வருமானம் கட்டாயம் என எந்த நாட்டின் சட்டத்திலும் இல்லை. ஆனால், அதற்கு பிறகு வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதே முக்கியமான கேள்வி." என நெட்டிசன் ஒருவர் கருத்து தெரிவித்துள்லார்.
நிதி நிலைமை மாற்றத்திற்குட்பட்டது, ஒருவரின் வருமான நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். வேலை இழப்பு, உடல்நலக் கோளாறு, அல்லது பொருளாதார மாற்றங்கள் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என சுட்டிக் காட்டும் மற்றொரு நெட்டிசன், "திருமணத்திற்கு வருமானம் முக்கியம் என்றால், திருமணத்திற்குப் பிறகு வேலை இழந்தால் என்ன செய்வது? இது ஒரு தவறான கோணத்தில் பேசப்பட்ட கருத்து." என விமர்சித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications