கள்ளக்குறிச்சி நிலப்பத்திரம்.. 1 ஏக்கர் 64 சென்ட்.. எழுதி வாங்கிய சொத்தை மீட்டுத்தர தந்தை கோரிக்கை
டெல்லி: பிள்ளைகளுக்கு தானமாக எழுதி தந்த சொத்துக்களை, பெற்றோர்கள் திரும்ப பெற முடியுமா? தான செட்டில்பமென்ட் செய்த பிறகு, அந்த சொத்துக்களில் , பெற்றோருக்கு மீண்டும் உரிமை உள்ளதா? உச்சநீதிமன்றம் இதுகுறித்து முக்கிய தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது.
சொத்து பிரச்சனை தொடர்பான புகார்கள் ஆங்காங்கே அதிகமாகி கொண்டே வருகின்றன. குறிப்பாக, வயது முதிர்ந்த பெற்றோர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், குடும்ப சூழல்கள் காரணமாக, சில பெற்றோர்கள், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக, வாரிசுகளுக்கு சொத்தை எழுதி கொடுத்து விடுகிறார்கள்.

வாரிசுகள்: ஆனால், ஒருகாலட்டத்துக்கு பிறகு தாய்-தகப்பனை வாரிசுகள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல், மாவட்ட கலெக்டர்களிடம், அந்த பெற்றோர்கள் கண்ணீருடன் மனு கொடுக்கும் நிலைமைக்கும் ஆளாகிறார்கள். அதனால்தான், செட்டில்மென்ட் பத்திரத்தை, ரத்து செய்ய வழியிருக்கிறதா? என்று ஆதங்கத்துடன் பலரும் கேள்விகள் எழுப்புகிறார்கள். இதற்காகவே, "சட்ட விதிகளுக்கு உட்பட்டு" வருவாய் துறையும் அவ்வப்போது சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், வயதான காலத்தில் பிள்ளைகள் கவனிக்காவிட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
உணர்வுகள்: அந்த தீர்ப்பில், "மூத்த குடிமக்களின் உணர்வுகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலைக்குரியதாகும். இதுபோன்ற சூழலில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் "பெற்றோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள் சட்டத்தின்"படி பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். அந்த தான பத்திரத்தை செல்லாது என்றும் அறிவிக்கலாம்.
இந்த சட்டம் மூத்த குடிமக்களுக்கு உதவி செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது.. அதனால் கூட்டுக்குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்படும் மூத்த குடிமக்கள் விஷயத்தில் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதைவிட, அதில் தளர்வுகள் காட்டி சட்டத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும்.. தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும்" என்று தீர்ப்பு தந்தனர்.
ஆறுதல் தீர்ப்பு: சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி தந்துவிட்டு, நடுத்தெருவில் கதிகலங்கி நிற்கும் எத்தனையோ வயதான பெற்றோர்களுக்கு, சுப்ரீம்கோர்ட்டின் இந்த தீர்ப்பானது, மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
ஆனால், கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு துயரம் நடந்துள்ளது.. ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்.. 85 வயதாகிறது.. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விபூஷணன் தன்னுடைய அப்பாவை திருநாவலூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று, தந்தையின் பெயரில் இருந்த 1 ஏக்கர் 64 சென்ட் விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றியுள்ளார்.
கள்ளக்குறிச்சி: ஆனால் அதற்கு பிறகு, விபூஷ்ணன் தன்னுடைய அப்பாவை சரிவர கவனிக்கவில்லையாம்.. இதை கேள்விப்ட்ட மற்ற 3 மகன்களும், மூத்த மகனுக்கு சொத்தை எழுதி தந்துவிட்ட அப்பா மீது கோபப்பட்டு, அவரை கவனித்து கொள்ளவில்லை என தெரிகிறது.. இதனால், வயது முதிர்ந்த லட்சுமணனுக்கு எங்கேபோய் தங்குவது என தெரியாமல், தன்னுடைய சொந்தக்காரர்களின் வீடுகளில் தங்கி கடினமான சூழலில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஊர் முக்கியஸ்தர்களின் உதவியோடு தன்னுடைய மகன் தன்னிடமிருந்து எழுதி வாங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்ணீரோடு திருக்கோவிலூர் சார் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி உரிய விசாரணை நடத்தி பத்திரத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார் ஆட்சியர் உறுதி தந்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications