கமல்ஹாசன் பதவியேற்பை பார்க்க போன அந்த 3 பேர் யார் தெரியுமா..? சுவாரசிய தகவல்
டெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தாம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்பதை நேரில் பார்ப்பதற்காக 3 பேரை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மூன்று பேர் யார் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ராஜ்யசபா எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது கமல்ஹாசன் வெள்ளை சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து நாடாளுமன்றம் வந்தார்.
தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்ற இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன், வணக்கம் என்று பதவி ஏற்றுக் கொண்டார்.

கமல்ஹாசன் எனும் நான் என்று அவர் பதவியேற்றுக் கொண்ட வீடியோவை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் கமல்ஹாசன் பதவியேற்றதை அக்கட்சியின் நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் பார்த்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திரையுலகினரும், ரசிகர்களும், பொதுமக்களும் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்ற கமல்ஹாசனுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசன் தன்னுடன் 3 பேரைப் பதவியேற்பு விழாவிற்கு நாடாளுமன்றம் அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி காலையில் நாடாளுமன்றத்திற்கு காரில் வந்த கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்தார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரான அருணாச்சலம், மநீம துணைத் தலைவர் மெளரியா உள்ளிட்டோரையும் கமல்ஹாசன் அழைத்துச் சென்றுள்ளார்.
கமல்ஹாசன் பதவியேற்பின் போது இவர்கள் மூவரும் அடுத்த மாடத்தில் இருந்து நேரில் பார்வையிட்டிருக்கின்றனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றம் சென்றுள்ளார். சட்டசபையிலும் மநீம கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனால் கமல்ஹாசனின் அடுத்த நோக்கம் திமுக கூட்டணியில் இருந்து சட்டசபைக்குத் தனது கட்சியினரை அனுப்புவதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications