எமர்ஜென்சி.. பிரியங்கா காந்தியை அழைத்த கங்கனா ரனாவத்.. இப்போது சொன்ன விஷயம் தெரியுமா?
டெல்லி : காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ராவை நாடாளுமன்றத்தில் சந்தித்த பாஜக எம்பி கங்கனா ரனாவத், தனது புதிய படமான "எமர்ஜென்சி" ஐப் பார்க்குமாறு அழைத்துள்ளார். அப்போது பிரியங்கா காந்தி, மிகவும் கனிவுடன் 'நிச்சயமாக , பார்க்கலாம்' என்று கூறினாராம். மேலும் இந்திரா காந்தி வேடத்தில் நடித்ததற்காகவும், தனது தலைமுடியையும் பிரியங்கா காந்தி பாராட்டியதாகவும் கங்கனா ரனாவத் கூறினார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக எம்பியாக இருப்பவர் கங்கனா ரனாவத். பிரபல நடிகையாக கங்கானா ரனாவத்தே தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம், 'எமர்ஜென்சி'. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா என்பவர் எழுதியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள எமர்ஜென்சி படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய படம் ஆகும். ஆனால் படத்தில் வரும் காட்சிகள் சீக்கியர்களுக்கு எதிராக இருப்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது.
சென்சார் போர்டும் படத்திற்கு சான்றிதழ் தந்து படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. இதனால் நீண்ட நாட்களாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு வந்தது. ஒருவழியாக சில காட்சிகளை வெட்டி நீக்கப்பட்ட பின்னர் படம் இப்போது வெளியாகப்போவது உறுதியாகி உள்ளத. இப்படம் ஜனவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் தான் இயக்கி தயாரித்து நடித்துள்ள'எமர்ஜென்சி' படத்தைக் காண வருமாறு நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி வதேராவுக்கு நாடாளுமன்றத்தில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அப்போது பிரியங்கா காந்தி, மிகவும் கனிவுடன் 'நிச்சயமாக , பார்க்கலாம்' என்று கூறினாராம். மேலும் இந்திரா காந்தி வேடத்தில் நடித்ததற்காகவும், தனது தலைமுடியையும் பிரியங்கா காந்தி பாராட்டியதாகவும் கங்கனா ரனாவத் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதுபற்றி கங்கானா கூறுகையில், " நான், நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்தேன். நான் அவரிடம் 'நீங்கள் என்னுடைய படத்தைப் பார்க்க வேண்டும்' என்று கேட்டேன். இந்திராவைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நான் இந்திரா காந்தியை மிகவும் கண்ணியமாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும். நான் நேசிக்கும் தலைவர்களில் இந்திரா காந்தியும் ஒருவர்" என்றார்.
இதனிடையே கங்கனா ரனாவத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பலவீனமாக இருப்பவர்களே மற்றவர்களை அதிகமாக கட்டுப்படுத்த வேண்டுமென நினைப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.. அந்த வகையில் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவர். தன்னம்பிக்கை இல்லாதவராகவும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவராகவும் இருந்துள்ளதாக தெரிகிறது. அவரைச் சுற்றி பல ஊன்றுகளை வைத்திருந்தார். எப்போதும் தனது செயலுக்கு ஒப்புதல் தேடுபவராகவும் இருந்துள்ளார்.இந்திரா காந்தி பலரை மிகவும் நம்பியிருந்தார். அதில் சஞ்சய் காந்தியும் ஒருவர்" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications