Kanimozhi: 41+ 2+ 20% கேட்ட ராகுல்காந்தி? ஸ்டன்னான கனிமொழி? டெல்லியில் நடந்தது என்ன?
டெல்லி: திமுக- காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்த போது அவர் என்ன வலியுறுத்தினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் 17ஆவது சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தல் மட்டும் இல்லை, கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டசபை தேர்தல் உள்ளிட்டவைகளிலும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 18 தொகுதிகளில் வென்றது. இதனால் இந்த 2026 தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு
இது போதாததற்கு ஆட்சியில் பங்கு குறித்தும் திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறி வந்தது. ஆனால் தற்போது மாநிலத்தில் ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸை பார்த்து திமுகவுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
பொதுவெளியில் பேச்சு
ஆட்சியில் பங்கு என்பது குறித்து பேசுவதற்கென கமிட்டிகள் காங்கிரஸில் அமைக்கப்பட்ட போதிலும் அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருவதும் திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
திமுக- காங்கிரஸ் நிர்வாகிகள்
என்னதான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையும் மாநில தலைமையும் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை கூறினாலும் அவர்கள் கேட்ட பாடில்லை. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல் போக்கு ஏற்பட்டுதான் வருகிறது.
பட்ஜெட் கூட்டம்
இந்த நிலையில்தான் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுனேரி பாக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார்.
41 சட்டசபை தொகுதிகள்
அப்போது ராகுல் காந்தி என்ன பேசினார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் வெளியாகியிருக்கின்றன. கனிமொழியிடம், ராகுல்காந்தி, "இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும், 41 சட்டசபை தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட்கள் வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் 20 சதவீத இடங்கள் வேண்டும். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜக எப்படி 30 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் என்பதால் அந்த கட்சிக்கு இணையாக எங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்" என வலியுறுத்தினாராம்.
27 தான் முடியும்
இதனால் அதிர்ந்த கனிமொழி, "ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தில் இதுவரை நடந்ததே இல்லை. இதை தற்போது எதிர்பார்க்கவே முடியாது. 41 சட்டசபை தொகுதிகள் என்பதெல்லாம் மிகவும் அதிகம். கடந்த தேர்தலில் 25 தொகுதிகளை கொடுத்தோம். இந்த முறை அது 27 ஆகலாமே தவிர 41 என்பது நிச்சயம் முடியவே முடியாது.
ராஜ்யசபா சீட்
அது போல் ராஜ்யசபா எம்பி சீட், உள்ளாட்சி தேர்தலில் இடம் என்பதெல்லாம் நிச்சயம் நான் முடிவு செய்ய முடியாது. தலைவரும் (ஸ்டாலின்) இதற்கு ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை" என்றாராம்.
கனிமொழி சொன்னது என்ன?
இப்படிப்பட்ட நிலையில்தான் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக- காங்கிரஸ் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கும், திமுக கூட்டணியில் வேறு புதிய கட்சிகளும் இணைகின்றன என்றார்.
திமுக கூட்டணியில் கூட்டம்
திமுக கூட்டணி என்பது ஏற்கெனவே ஃபுட் போர்டு அடிக்கக் கூட இடமெல்லாத அளவுக்கு நிறைய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தொகுதியை வேறு அதிகரிக்க பல கட்சிகள் கேட்கின்றன. அப்படி இருக்கும் போது புதிய கட்சிகள் உள்ளே நுழைவதாக கனிமொழி கூறியிருக்கிறார் என்றால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எது எப்படியோ இந்த பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு clear picture கிடைக்கும் என்பதை நம்புவோமாக!
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications