இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பாளர்களா.. பழி போடுறாங்க.. நீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்.. என்ன நடந்தது?
டெல்லி: ஆக்கிரமிப்புகள் இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தப்படுவதாகவும், புல்டோசரில் வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
ஜஹாங்கிர்புரியில் அனுமன் சேனா ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர் அவ்வழியே உள்ள மசூதி அருகே தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது.
இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் மீதும் அப்பகுதி இஸ்லாமியர்கள் மீதும் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை மீது வீடுகள் இடிப்பு
இதனிடையே ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக கூறி அவற்றை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்பேரில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை போல் புல்டோசரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டிடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்தது. ஆனால், நீதிமன்ற ஆணை தங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் ஏராளமான வீடுகளை இடித்துத் தள்ளினர்.

அதிரவைத்த புகைப்படங்கள்
வீடுகள், கடைகளை இழந்து இடிபாடுகளில் கண்ணீருடன் பொருட்களை சேகரிக்கும் மக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இஸ்லாமியர்களை தொடர்புபடுத்துகிறீர்கள்
அப்போது ஆஜரான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஜஹாங்கிர்புரியில் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பதற்கு எதிராக வாதிட்டார். அப்போது பேசிய அவர், "ஆக்கிரமிப்புகள் தவறுதான். ஆனால், இங்கு நடப்பது என்னவென்றால், ஆக்கிரப்புகளை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்துகிறார்கள்." என்றார். இதைக்கேட்ட நீதிபதி ராவ், இந்துக்களின் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லையா? எனக்கேள்வி எழுப்பினார்.

ராம நவமி ஊர்வலம்
அதற்கு பதிலளித்த கபில் சிபல், "இதை நாங்கள் சொல்லவில்லை. அமைச்சர்கள் சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தின்போது நடந்தது. ஊர்வலங்களை தங்கள் பகுதிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் கைது செய்யப்பட்டனர்.

பயத்தை ஏற்படுத்த முயற்சியா?
குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. இது எந்த மாதிரியான நடைமுறை. சட்டத்தின் ஆட்சியை ஓரங்கட்ட பயத்தை ஏற்படுத்தும் முயற்சியா?" எனக் கேட்டார். உங்களுக்கு எந்த மாதிரியான நிவாரணம் வேண்டும் என கபில் சிபலிடம் நீதிபதி வினவினார்.
Recommended Video

புல்டோசரை நிறுத்துங்க!
"நீங்கள் ஆக்கிரமிப்பை ஒரு சமுதாயத்துடன் தொடர்புபடுத்தக்கூடாது. ஆக்கிரமிப்புகளில் இருந்து எந்த சமுதாயம் விதிவிலக்கு இல்லை. ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று சொல்லி உங்களால் சாதாரணமாக இடித்துவிட முடியாது. இந்த நீதிமன்ற அவை சட்டத்தின் ஆட்சி இங்கு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டிடங்கள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்" என கபில் சிபல் வாதிட்டார். உடனே, "நாடு முழுவதும் நடக்கும் கட்டிட இடிப்புகளை தடுக்க முடியது" என நீதிபதி ராவ் தெரிவிக்க, இதுபோல் புல்டோசரில் வீடுகள் தகர்க்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன்." என கபில் சிபல் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications