பரபர டெல்லி- சித்தராமையா Vs டிகே சிவகுமார்! யார் முதல்வர்? யாருக்கு எது சாதகம், பாதகம்? இதோ லிஸ்ட்
டெல்லி: கர்நாடகா மாநில புதிய முதல்வர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் டெல்லி மேலிடம் பரபரத்து கொண்டிருக்கிறது. கர்நாடகா முதல்வர் யார் என்பதை இன்று இரவு அறிவிக்க இருக்கிறது.
கர்நாடகா தேர்தலில் 135 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துவிட்டது காங்கிரஸ். ஆனால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் நேற்று முதல் இழுபறி நீடித்து வருகிறது. பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் டெல்லி மேலிடமே முடிவு எடுக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் சித்தராமையா, டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் ஓய்ந்துவிடப் போவதில்லை என்பதை போஸ்டர்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.

கர்நாடகா காங்கிரஸில் தற்போதைய நிலையில் சித்தராமையா, டிகே சிவகுமார் பிரதான போட்டியாளர்கள்.
சித்தராமையாவைப் பொறுத்தவரையில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்; காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்; 2013-18 ஆம் ஆண்டில் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்த முதல்வர்; சிறந்த நிர்வாகி. 13 நிதி நிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்த ஆளுமையாளர் என்பவை சாதக அம்சங்களாக இருந்து வருகின்றன.
ஆனால் கட்சி கட்டமைப்புகளில் உணர்வுப்பூர்வமான தொடர்பை கொண்டவரும் இல்லை; 2018-ல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் மாநிலத்தில் கொண்டுவர தவறியவர்; மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து காங்கிரஸுக்கு வந்தவர் என்பவை பாதக அம்சங்களாக இருக்கின்றன. குறிப்பாக சித்தராமையா வயது 75 ஆகி விட்டது; அதனால் அவருக்கு ஏன் முதல்வர் பதவி என்கிற கேள்வியையும் எதிர்கோஷ்டியினர் எழுப்புகின்றனர்.
இவை அல்லாமல் போட்டியாளரான டிகே சிவகுமார் மீது ஏராளமான வழக்குகள் இருப்பவை; சித்தராமையா இது தமக்கு கடைசி தேர்தல் என கூறியதால் கடைசி முதல்வர் வாய்ப்பு என்பவையும் அவருக்கு சில கூடுதல் சாதகங்களாகவும் உள்ளன.
டிகே சிவகுமாரைப் பொறுத்தவரையில் கட்சியினருடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பவர்; காங்கிரஸ் கட்சியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பாடுபட்டவர்; மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்பதாலேயே இயல்பாகவே முதல்வர் பதவிக்குரியவர்; காங்கிரஸ் கட்சி கர்நாடகத்திலும் பிற மாநிலங்களிலும் சோதனைகளை சந்தித்த போதெல்லாம் உயிரைக் கொடுத்து அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக இருந்தவர் என்பவை மிகவும் சாதகமான அம்சங்கள். அத்துடன் சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்; காங்கிரஸுக்கு விசுவாசமானவர்; சித்தராமையாவைவிட இளையவர்; நீண்ட்கால அரசு, அரசாங்க அனுபவம் கொண்டவர் என்பதையும் டிகே சிவகுமாருக்கு சாதகமாக கூறப்படுகிறது.
மேலும் ஒக்கலிகா கவுடா எம்.எல்.ஏக்கள் உட்பட பழைய மைசூர் பிராந்திய எம்.எல்.ஏக்கள் அனைவரும் டிகே சிவகுமாரை ஆதரிப்பதும டிகே சிவகுமாருக்கு சாதகமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை அனைத்துமே வழக்கு போட்டுள்ளன; திஹார் சிறை வாசம் அனுபவித்தவர்; சித்தராமையாவைப் போல மக்கள் செல்வாக்கு இல்லாதவர்; பழைய மைசூரு மண்டலத்தில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர் என்பவை எல்லாம் டிகே சிவகுமாருக்கு நெகட்டிவ் பாயிண்டுகள். இவைகள் அல்லாமல் தலித் முதல்வர் என்ற கோஷம் சித்தராமையா, டிகே சிவகுமார் இருவருக்குமே எதிராகவும் இருக்கிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications