கரூர் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.. நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.. உச்சநீதிமன்றம் வேதனை!
டெல்லி: கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கோரி தாக்கல் செய்ய பொதுநல வழக்கின் விசாரணையின் போது, கரூர் சம்பவத்தில் நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின் தவெக நிர்வாகிகாளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து சுமார் 20 மணி நேரம் விசாரனை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின் தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ விசாரணைக்கு சம்மன் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய இரு நாட்களும் தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினார். கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் இதுநாள் வரை கரூர் மாவட்டத்திற்கே செல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து விஜய் சந்தித்தார்.
சிபிஐ விசாரணையின் போது தவெகவினர் பலரும் தமிழக அரசை குற்றம்சாட்டியதாக தெரிகிறது. அதேபோல் விஜய் தாமதமாக வந்தது ஏன்? தண்ணீர் பாட்டிலை தூக்கியெறிந்த போதும் கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? கரூர் பிரச்சார தேதியை கடைசி நேரத்தில் மாற்றியது ஏன் என்றும் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. கரூர் சம்பவத்தில் தலையிட்டு நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!











Click it and Unblock the Notifications