கரூர் கூட்ட நெரிசல்.. அருணா ஜெகதீசன் ஆணையம் உள்பட தமிழக அரசின் கோரிக்கை ஏற்காத உச்சநீதிமன்றம்
டெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாது பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது அருணா ஜெகதீசன் ஆணையத்தை ரத்து செய்த உத்தரவை மாற்றி மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறிய நிலையில் அதனை உச்சநீதிமன்றம் உடனடியாக ஏற்க மறுத்ததோடு, சென்னை கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏதோ தவறு உள்ளது எனக்கூறி வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மேலும் வழக்கை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தது.
இதற்கு எதிராகவும், சிபிஐ விசாரணைக்கோரியும் தமிழக வெற்றிக் கழகதத்தின் சார்பில் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு வழங்கியது. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரைணயை தொடங்கினர். சிறப்பு புலனாய்வு குழுவினர், சிபிஐ வசம் ஆவணங்களை ஒப்படைத்தனர். சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த இடம், அங்கு கூடியவர்கள், நெரிசலில் சிக்கிய காயமடைந்து உயிர் பிழைத்தவர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் , ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் கரூர் தவெக கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே தான் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய அக்டோபர் 13, 2025 தேதியிட்ட உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அமைந்த சிறப்பு புலனாய்வுக் குழுவே (எஸ்ஐடி) மீண்டும் விசாரிக்க வேண்டும். செப்டம்பர் 28, 2025 அன்று அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையத்தின் இடைநீக்கத்தை நீக்க வேண்டும். சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரிகள் சொந்த மாநிலத்தை சேராதவர் என்று இருப்பதை நீக்க வேண்டும். அதேபோல் எஸ்எல்பி எனும் சிறப்பு அனுமதி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தான்தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு சார்பில் இன்று வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், ‛‛அருணா ஜெகதீசன் ஆணையத்தை மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியது. இதையடுத்து அதற்கான நோக்கம் பற்றி உச்சநீதிமன்றம் கேட்டது.
அதற்கு தமிழக அரசு சார்பில், ‛‛தமிழகத்தில் எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த ஆணையம் பரிந்துரைகளை வழங்கும். இதனால் ஆணையத்தை செயல்பட அனுமதி வழங்க வேண்டும்'' என்று கூறினார். ஆணையத்தின் நோக்கத்தை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக ஏற்க மறுத்துவிட்டது.
அதோடு கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை தனி நீதிபதி எப்படி விசாரித்தார்? என கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம் அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு உத்தரவிட்டு பதில் மனு, விளக்க மனு உள்ளிட்டவை அனைத்தையும் சேர்த்து ஜனவரியில் விசாரிப்பதாக கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications