குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா மனு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்சில் இவ்வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெறுவதை காரணம் காட்டி இவ்வழக்குகளை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் கைவிடப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்நிலையில் கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கேரளா அரசு ஏற்கனவே சட்டசபையில், சி.ஏ.ஏ.வை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் முதல் மாநில அரசும் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications