மரடு அடுக்குமாடியை இடிக்க ஒருமணி நேரம் கூட அவகாசம் தரமுடியாது.. உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை
Recommended Video
டெல்லி: கொச்சி அருகே மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் தர கேரள அரசு கோரிக்கை விடுத்து. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஒருநாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட கூடுதல் அவகாசம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியில் கடல்சார் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20 ஆம் தேதிக்குள் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டு இருந்தது.

கால அவகாசம் கேட்பு
ஆனால் செப்டம்பர் 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கேரள தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கட்டிடத்தை இடிக்க மூன்று மாதம் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா மற்றும் நீதிபதி ரவீந்ரா எஸ். பட் ஆகியோர் அமர்வு " கட்டிடத்தை இடிக்க கால அவகாசம் கோருவது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

யார் பொறுப்பு
இடித்து தள்ள வேண்டும் இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பதிலளிப்பது. குடியிருப்புகளை இடிக்கப்பட வேண்டும். உங்களால் (கேரளா அரசாங்கத்தால்) அதை இடிக்க முடியாவிட்டால், அதை உங்கள் பதில் (கேரள அரசு) பணத்தில் வேறு ஒருவரை வைத்து இடிக்குமாறு கேட்போம் என்று அதிரடியாக தெரிவித்தது.

உடனே இடிங்க கட்டிடத்தை
மரடு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இடைக்கால இழப்பீடாக உடனடியாக தலா 25லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இடைக்கால இழப்பீடு செலுத்துவதற்கான பணத்தை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் பின்னர் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டியவர்களிடம் அதை மீட்டு, 138 நாளில் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதிப்பீடு செய்யும் பணி
மேலும் அடுக்குமாடி இடிப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற குழுவுக்கான பரிந்துரையை வழங்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து நீதிபதி குழு தேர்வு செய்யப்படும் என்றும், அந்த குழு ஒவ்வொரு குடியிருப்புகளையும் மதிப்பீடு செய்யும் என்றும் இழப்பீட்டை முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

243 பிளாட்டுக்கள் ரெடி
இந்நிலையில் மரடு குடியிருப்பில் மொத்தம் உள்ள 326 பிளாட் உரிமையாளர்களில் 243 குடியிருப்புகளை சேர்ந்தவர்களே வெளியேறி உள்ளார்கள். மற்றவர்கள் கூடுதல் காலஅவகாசம் கேட்டுள்ளனர்.இதனால் குடியிருப்புகளை இடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இதையடுத்து மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் தர கேரள அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஒருநாள் கூட ஏன் ஒரு மணி நேரம் கூட கூடுதல் அவகாசம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அரசுக்கு எச்சரிக்கை
மரடு வழக்கு தொடர்பாக எந்த முறையீட்டையும் கேட்கமாட்டோம், எந்த மனுவையும் விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். மேலும் மரடு அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் மீண்டும் முறையிடக் கூடாது என்றும் கேரளா அரசு மீண்டும் முறையிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications