இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1701; கேரளாவில் மட்டும் 1324 ஆக அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1324 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 699,638,659. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 669,413,292. உலகம் முழுவதும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 6,956,687. உலக நாடுகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 23,268,680. உலக நாடுகளில் நேற்று புதியதாக 15,046 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில்தான் 90%க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1701. இதில் கேரளாவில் மட்டுமே 1324 ஆக்டிவ் கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன. கேரளா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 700 முதல் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரளாவில் கொரோனாவால் 2 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் JN1 பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கேரளா கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பலியானார். இதனையடுத்து பானூர் நகராட்சியில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கயை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேரளாவின் வடமாவட்டங்களில் 2 நாட்களில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,44,69,799 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,3316. நமது நாட்டில் 220,67,79,004 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு தொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், கொரோனா பரவலால் அச்சமடைய தேவையில்லை. JN1 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன்னரே இந்தியர்களுக்கு இந்த வகை பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தற்போதும் நாட்டின் சில பகுதிகளில் இப்பாதிப்பு உள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications