தமிழக போலீஸ் என்னை தேடி டெல்லி வந்துள்ளது.. கொடநாடு வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் பரபர போஸ்ட்!
தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழக போலீஸ் தன்னை கைது செய்ய டெல்லி வந்திருப்பதாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் மரணங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக நேற்று முதல்நாள் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். அவர் இது தொடர்பாக முக்கியமாக ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார்.

இது பெரிய புயலை கிளப்பியது. இந்த நிலையில் மேத்யூஸ் சாமுவேல் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவரை கைது செய்ய தமிழக போலீஸ் டெல்லி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தற்போது மேத்யூஸ் சாமுவேல் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்கில் பரபர பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டெல்லி மற்றும் சென்னையில் இருக்கும் எனது நண்பர்கள் சிலர், தமிழ்நாடு போலீஸ் என்னை கைது செய்ய டெல்லி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். என்னுடைய வீட்டை அவர்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கேவி சயன், வலயர் மனோஜ் ஆகியோரை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
எனக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தியாவில் முதல்முறை இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது, என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பெரிய வைரலாகி உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications