"2 பிங்கர் டெஸ்ட்".. பெண் அதிகாரிக்கு பரிசோதனை செய்யப்படவில்லை.. விமானப்படை தளபதி மறுப்பு
கோவை பெண் அதிகாரி வழக்கு குறித்து விமானப்படை தளபதி சவுத்ரி பேட்டி தந்துள்ளார்
டெல்லி: கோவையில் பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரிக்கு 2 பிங்கர் டெஸ்ட் பரிசோதனை செய்யப்படவில்லை என்று விமானப்படை தளபதி சவுத்ரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை ரெட்பீல்டில் விமான படை பயிற்சி கல்லூரி உள்ளது... இந்த கல்லூரியில் நாடு முழுவதும் இருந்து விமான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரியும் இங்கு வந்துள்ளார்.. கடந்த 10-ம்தேதி விமான படை அலுவலகத்தில் மதுவிருந்தும் நடந்துள்ளது. அந்த விருந்தில் பெண் அதிகாரி கலந்து கொண்டுள்ளார்.

மைதானம்
அன்றைய தினமே மைதானத்தில் கூடைப்பந்து விளையாடி உள்ளார். விளையாடியபோது, அவரது காலில் திடீரென காயம் ஏற்பட்டுவிட்டது.. அதனால் வலி பொறுக்க முடியாமல், விமான படை ஆபீசில் உள்ள தன்னுடைய ரூமுக்கு சென்று வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டார்...

அமித்தேஸ்
பிறகு எழுந்து பார்த்த பிறகு, அவரது ஆடை களையப்பட்டிருந்தது தெரியவந்தது.. பிறகு, அங்கு பயிற்சிக்காக வந்திருந்த சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஸ் என்பவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோரை சந்தித்து புகார் அளித்தார்... இதையடுத்து, அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

கோர்ட் உத்தரவு
விசாரணைக்கு பிறகு, கோர்ட் உத்தரவுப்படி விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் அமித்தேஷ் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தந்தார்.. அதில், சட்டவிரோதமாக தம்மை விமானப்படை மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.. இருவிரல்கள் முறையில் "2 பிங்கர் டெஸ்ட்" செய்தனர்... ஆனால் இந்த டெஸ்ட்டை 2014ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டது என்ற தகவல் எனக்கு பிறகுதான் தெரிந்தது...

புகார்
பாலியல் பலாத்கார புகாரை திரும்ப பெற வலியுறுத்தியதால், போலீசாரிடம் புகார் அளிக்கிறேன்.. செப்டம்பர் 10ம் தேதி தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விமானப்படை தள பொறுப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்த பிறகும், அவர் 20ம் தேதிவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை " என்று கூறியிருந்தார். இந்த புகார்களை வைத்து, கோவை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்... எப்ஐஆரிலும் இந்த இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

மறுப்பு
இந்நிலையில், இரு விரல் சோதனை என்ற புகாரை விமானப்படை மறுத்துள்ளது.. இது தொடர்பாக விமானப்படை தளபதி சவுத்ரி கூறும்போது, "இது போன்ற சம்பவங்களுக்கு இந்திய விமானப்படை சட்டங்கள் கடுமையாக இருக்கிறது.. பெண் அதிகாரிக்கு 2 பிங்கர் டெஸ்ட் பரிசோதனை செய்யப்பட்டதாக வெளியான அறிக்கை தவறானது.. அப்படி ஒரு டெஸ்ட் செய்யப்படவேயில்லை.. எங்களுக்கும் விதிமுறைகள் தெரியும்.. அனைத்து விதிமுறைகளையும் தெரிந்துதான் வைத்திருக்கிறோம்.. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications