சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்.. 8 ஐகோர்ட்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர், தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். டி.ராஜா கடந்த ஆண்டு மே மாதம் 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர் கடந்த ஆண்டு மே மாதம் நியமித்தார். இவர் கடந்த மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார். அவர் அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 மாததத்திற்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர், தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இதேபோல் டெல்லி, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, கேரளம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜீவ் சக்தேர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோல் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திர பிரசன்ன முகர்ஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஷி ரப்ஸடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எஸ்,ராமச்சந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அதன்படி, மாவட்ட நீதிபதிகளான ஆர்.பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நீதிபதிகளான நீதிபதி விக்டோரியா கெளரி, நீதிபதி ஶ்ரீ பிள்ளைப்பாக்கம் பகுக்குட்டும்பி பாலாஜி, நீதிபதி ஶ்ரீ கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதிபதி ராமச்சந்திர கலைமதி, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகவும் நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டது..
இது ஒருபுறம் எனில், மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அதே அறிவிப்பில், 'அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அஹமத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் விரைவில் அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்' என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications