"குழந்தைகள் உள்ளனர்.. நான் தாய் என கெஞ்சினேன்.. ஆனால்.." மணிப்பூர் பயங்கரம்! பாதிக்கப்பட்ட பெண் பரபர
டெல்லி: மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே கடும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கே ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியுள்ளது.

இதற்கிடையே குக்கி இன பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதனிடையே இதில் தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது
வன்முறை: கடந்த மே 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் காலை தான் 40+ வயதான அந்த பெண், தனது கிராமத்தில் இருந்தால் ஆபத்து என 4 குழந்தைகளையும் அருகே உள்ள நாகா கிராமத்திற்கு அனுப்பியுள்ளார். இது இவரது கிராமத்தில் இருந்து 40 நிமிடங்கள் பயண தூரத்தில் அமைந்திருக்கிறது. கிராமத்தில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிய பிறகு, இந்தப் பெண்ணும் அவரது கணவரும் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
அவர் உட்பட மொத்தம் 8 குக்கி இன மக்கள் அங்கிருந்த காட்டில் மறைந்து இருந்தனர். அப்போது அங்கே வந்த மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களைப் பிடித்துள்ளனர். அதன் பிறகு என்ன நடந்தது என்ற கொடூரத்தை அந்த பெண் தி பிரிண்ட் ஆங்கில ஊடகத்திற்கு விவரித்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், "மலையின் மீது இருந்த குக்கி கிராமம் ஒன்றை எரித்துவிட்டு அந்த கும்பல் வந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்தில் இருந்து கொள்ளையடித்த பன்றிகள், மாடுகள் மற்றும் ஆடுகளை வைத்திருந்தார்கள். அப்போது சில ஆடுகள் நாங்கள் மறைந்திருந்த இடத்திற்கு வந்துவிட்டது. அதை வைத்து அந்த கும்பல் எங்களைப் பிடித்துவிட்டது" என்றார்.
என்ன நடந்தது: அதன் பிறகு தன்னையும் மற்றொரு இளம் வயது பெண்ணையும் அங்கிருந்த சிலர் ஓர் இடத்திற்கு இழுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். மேலும், இணையத்தில் பரவிய வீடியோவில் இருந்த அந்த பெண்ணையும் அவரது சகோதரர் மற்றும் தந்தையைப் பிரதான சாலையை நோக்கி அழைத்துச் சென்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்..
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் உடைமைகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள். முதலில் அங்கிருந்தவர்கள் எங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்றே கூறி வந்தனர். இருப்பினும், கூடுதலாக அங்கே மைத்தேயி இன மக்கள் வர வர நிலைமை மோசமானது. ஆடைகளைக் கிழித்து பெண்களிடம் அத்துமீற ஆரம்பித்தனர். ஆண்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் தனது சகோதரருடன் பாதுகாப்பிற்காக போலீஸ் ஜீப்பில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும், அந்த கும்பல் போலீஸ் ஜீப்பில் இருந்து அவர்களை வெளியே இழுத்தனர். அங்கிருந்த போலீசாரும் உதவவில்லை. இந்தக் கும்பலிடம் எங்கள் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அந்த இளம்பெண்ணின் தந்தையையும் சகோதரனையும் அந்தக் கும்பல் அடித்தே கொன்றுவிட்டது.
பலாத்காரம்: அதன் பிறகு அந்த இளம்பெண் பக்கம் திரும்பிய அந்தக் கும்பல், வலுக்கட்டாயமாக அவரது ஆடைகளைக் கலைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த வயல்வெளிக்கு அவரை நிர்வாணமாக ஊர்வலம் போல அழைத்துச் சென்றனர். அப்போது தான் அங்கிருந்த சிலர் இதை வீடியோவாக பதிவு செய்தனர்.
அந்த வயலில் எங்களை சில ஆண்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது நான் அவர்களிடம் எங்களை விட்டுவிடும்படி கெஞ்சினேன்.. அந்த கும்பலில் எங்கள் அண்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்களுக்கு என்னைத் தெரியும் என்பதால் அவர்களிடம் கெஞ்சினேன். எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் உங்களுக்கும் அம்மா போலத் தான் என்று கூட கூறினேன். அவர்கள் கருணை காட்டுவார்கள் என நினைத்தேன். ஆனால், நான் கத்தியது அவர்கள் காதில் விழவே இல்லை.
எனது அருகில் தான் அந்த இளம்பெண் இருந்தால், அவரை அந்த கொடூரர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அவர் கத்திய சத்தம் எனக்கு இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த கொடூரம் நீட்டித்தது. அதன் பிறகு தான் எங்களை போலீஸ் ஜீப் இருக்கும் இடத்திற்குக் கூட்டிச் சென்று விட்டனர்.
கொடூரர்கள்: தனது தந்தையும் சகோதரனும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அந்த இளம்பெண் கதறினாள். அப்போது அருகில் வந்த சிலர் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறும் இல்லையென்றால் எங்களையும் கொன்றுவிடுவார்கள் என மிரட்டினர். அப்போது அங்கிருந்த சிலர் எங்களுக்கு டீசர்ட் கொடுக்க முன்வந்தார்கள். இருப்பினும் அதைக் கூட சிலர் விடவில்லை. அதையும் பறித்துவிட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி வந்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
அவர்கள் அதன் பிறகு குக்கி இன மக்கள் இருக்கும் கிராமத்திற்கு வந்துவிட்டனர்.. அவர்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லையாம். போலீஸ் நிலையத்திலும் புகார் தரவில்லை. இந்தச் சம்பவம் நடந்து சுமார் 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த கொடூரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அவமானம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேபோல அங்கே அமைதி திரும்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்றம் தலையிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications