குவைத் தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலி.. அடையாளம் காண டிஎன்ஏ சோதனை.. விரைந்த மத்திய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குவைத் தீவிபத்தில் மொத்தம் 48-49 பேர் இறந்துள்ளனர். இதில் 42 -43 பேர் இந்தியர்கள். இவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குவைத்துக்கு புறப்படும் முன்பு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கேவி சிங் கூறினார்.

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவென பரவியது.

Kuwait Fire Accident DNA Test Union Minister

இந்த தீவிபத்தில் 40க்கும் அதிகமானவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் ஏராளமான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்த குடியிருப்பில் இந்தியாவை சேர்ந்தவர்கள் நிறைய பேர் வசித்துள்ளனர். இதனால் இந்தியர்கள் அதிகளவில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக கேரளா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். இதனால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களின் நிலை என்ன? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தீவிபத்து நடந்த கட்டத்தில் மீட்பு பணி நடந்துவருகிறது. நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 45 யை கடந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி குவைத் அரசு சார்பில் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட செய்தியில் 21 இந்தியர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இந்தியர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் குவைத் தீ விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது. இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கேவி சிங் டெல்லியில் இருந்து விமானத்தில் குவைத் புறப்பட்டு சென்றார்.

இந்த வேளையில் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ‛‛குவைத் தீவிபத்து சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் உள்பட நாங்கள் அனைவரும் கவயைடைந்துள்ளோம். தீவிபத்து தொடர்பாக நேற்று மாலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான் குவைத்துக்கு செல்ல உள்ளேன்.

எனக்கு முன்பாக தூதரக அதிகாரிகள் சென்றுள்ளனர். நான் அங்கு சென்று நிலைமையை அறிந்து அரசுக்கு தகவல் அளிக்க உள்ளேன். அங்கு தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். மேலம் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போய் உள்ளது. இதனால் பலியானவர்களை அடையாளம் காணும் வகையில் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய விமானப்படை விமானம் தயாராக உள்ளது. முடிந்த வரை சீக்கிரமாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு இந்தியா கொண்டு வரப்படும். நேற்று இரவு நிலவரப்படி தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது 48 முதல் 49 வரை இருக்கலாம் எனவும், இதில் 42 முதல் 43 பேர் வரை இந்தியர்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+