டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடே.. மோடி, அமித் ஷாவுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தலைவர் அமித் ஷா மற்றும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர்களே எதிர்பார்க்காத ஒரு முக்கிய பிரமுகரிடமிருந்து வாழ்த்து வந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல, பாஜக நிறுவனர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி.

குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் சிட்டிங் எம்பியாக இருந்த அத்வானியிடமிருந்து அந்த தொகுதி அமித்ஷா கைக்கு மாறியபோது, அத்வானி புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

L K Advani congratulations to Narendra Modi

ஆனால், காந்திநகர் தொகுதியில் அமித்ஷா வெற்றி பெற்றதோடு, அகில இந்திய அளவிலும், பாஜக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இதுவரை வெற்றி பெறாத மாநிலங்களிலும் பாஜக தனது தடத்தை பதித்துள்ளது. மேற்கு வங்கம், தெலுங்கானா போன்றவை இதற்கு உதாரணம்.

இந்த நிலையில், அத்வானி இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இதுவரை இல்லாத அளவுக்கான மரபை உடைத்து பெற்ற இந்த வெற்றிக்காக, நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள். அமித்ஷா மற்றும் அர்ப்பணிப்புள்ள பாஜக நிர்வாகிகள், இந்த நாட்டின் ஒவ்வொரு வாக்காளர்களிடமும் பாஜகவை கொண்டு சேர்த்துள்ளனர்.

சொந்த கோட்டையில் சரிந்த அஸ்திவாரம்.. அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்த தர்மபுரி.. திமுக எப்படி வென்றது? சொந்த கோட்டையில் சரிந்த அஸ்திவாரம்.. அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்த தர்மபுரி.. திமுக எப்படி வென்றது?

இந்தியா போன்ற வேற்றுமை பண்புகள் கொண்ட ஒரு பெரிய நாட்டில், தேர்தல் நடைமுறைகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது சிறப்பான மனநிறைவை தருகிறது. தேர்தல் ஆணையம் மற்றும் பிற ஏஜென்சிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது சிறந்த நாடு, வளமான எதிர்காலம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

English summary
L K Advani, of BJP says, Heartiest congratulations to Narendrabhai Modi for steering BJP towards this unprecedented victory in elections. Amitbhai Shah as BJP President & all dedicated workers of the party have put in enormous effort in making sure that BJP's message reaches every voter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X