இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்! பிரச்னைகளை வேகமாக தீர்க்க ஒப்புதல்- வெளியுறவு அமைச்சகம்
டெல்லி: இந்தியாவும் சீனாவும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளை "விரைவான முறையில்" தீர்க்க ஒப்புக் கொண்டன என்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Recommended Video
இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான இன்றைய ஆலோசனையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லடாக் கிழக்கு எல்லையில் கல்வான் பள்ளதாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இந்த ஆக்கிரமிப்பு முயற்சியை நமது ராணுவ வீரர்கள் தீரமுடன் முறியடித்தனர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஆலோசனை
இருநாடுகளின் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை இருநாட்டு அதிகாரிகளும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அறிக்கை
வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலாளர் நவீன் ஶ்ரீவத்சவா தலைமையிலான இந்திய குழு இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதை பாருங்கள்.

படைக்குறைப்பு
வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க, எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் மேற்கு செக்டாரில் முழுமையான படை குறைப்பு செய்யும் பணி தொடர்ந்து செயல்படும் என்று சீனத் தரப்பு மீண்டும் உறுதிப்படுத்தினர். தற்போதுள்ள ஒப்பந்தங்கள், நெறிமுறைகள் படி, நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவாக தீர்க்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பேச்சுவார்த்தை
இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம் என்பதில், இரு தரப்பினரும் (இந்தியா மற்றும் சீனா) உடன்பட்டன. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications