திருமணம் ஆன 6 நாளில் முடிந்த கடற்படை வீரரின் வாழ்க்கை.. காஷ்மீரில் மனைவியுடன் பகிர்ந்த கடைசி வீடியோ
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கடற்படையில் சேர்ந்தார். இவர் கேரளா மாநிலம் கொச்சியில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த ஏப்ரல் 16ம் தேதி தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னர் மனைவியுடன் தேனிலவிற்காக காஷ்மீரின் குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமின் பைசரான் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். கடற்படை வீரர் தனது மனைவியுடன் உற்சாக பாட்டுக்கு நடனமாடிய கடைசி வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
ஹரியானாவின் கர்னல் பகுதியைச் சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரியான , கொச்சியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 16-ம் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. 19-ம் தேதிதான் திருமண வரவேற்பு நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் நர்வால் (26 வயது) பி.டெக் பட்டப்படிப்பை முடித்த பிறகு நர்வால் இந்தியக் கடற்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்துள்ளார். வினய் நர்வால் அவரின் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவரின் தங்கை சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். வினய் நர்வாலின் தந்தை ஜிஎஸ்டி துறையில் கண்காணிப்பாளராக உள்ளார் மற்றும் அவரின் தாத்தா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆவார்.
இந்நிலையில் வினய் நர்வாலுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி பெற்றோர், குர்கிராமைச் சேர்ந்த ஹிமான்ஷி என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். ஹிமான்ஷி முனைவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள். கடற்படை அதிகாரிக்கும் இவருக்கும் திருமணம் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்தது. திருமண வரவேற்பு கடந்த ஏப்ரல் 19ம் தேதி உற்றார் உறவினர்கள் சூழ இனிதே நடந்தது. கடற்படை அதிகாரி வினய் நர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே காஷ்மீர் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்து , திருமண வரவேற்பு முடிந்த நிலையில், காஷ்மீரின் குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமின் பைசரான் பள்ளத்தாக்கிற்கு கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் மனைவியுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். இதன்படி வினய் நர்வால் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஏப்ரல் 21ஆம் தேதி காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் சந்தோஷமாக இருந்த வினய் நர்வாலை மலையில் இருந்து அதிரடியாக புகுந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
Last video shared by Lt. Vinay Narwal before he was killed by terrorists. Just 26, newly married, and committed to serving the nation—his life was cut short in the Pahalgam massacre. Life can be brutally unfair.
— Nikhil saini (@iNikhilsaini) April 23, 2025
Hope justice is served
#PahalgamTerroristAttack pic.twitter.com/uyqo5dQI5c
எந்த ஆயுதமும் இல்லாமல் மனைவியுடன் சுற்றுலா வந்த இடத்தில் கடற்படை அதிகாரி, திருமணம் ஆனவெறும் ஆறு நாளில் சுட்டுக் கொல்லப்பட்டசம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஒரு பெண், இறந்த உடலுடன் அமைதியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வினய் நர்வால் மற்றும் அவருடைய மனைவி ஹிமான்ஷியின் புகைப்படம் தான் அது ஆகும். இந்நிலையில் ஹிமான்ஷி தனது கணவர் வினய் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை கலங்க வைத்துள்ளது.
அதேநேரம் விஜய் நர்வால், தனது மனைவி ஹிமான்ஷியுடன் பைசரன் பள்ளத்தாக்கில் புல் வெளியில் பாடலுக்கு நடனமாடிய கடைசி வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த காட்சி பலரது நெஞ்சை உலுக்கி உள்ளது. இதை பார்த்த பலரும் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து வருகிறார்கள்.முன்னதாக கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் தாத்தா ஹவா சிங் நர்வால் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த செயலைச் செய்தவனை பிடித்து அவனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என் பேரன் சுடப்படவில்லை என்றால் நிச்சயம் இரண்டு அல்லது நான்கு தீவிரவாதிகளையாவது கொன்றிருப்பான், அவனின் இறப்புக்கு நிச்சயம் பழிதீர்க்கப்பட வேண்டும். இந்த தீவிரவாதம் கண்டிப்பாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்." என்றார். வரும் மே 1 தான் நர்வாலின் பிறந்தநாள். தேனிலவிலிருந்து திரும்பிய பிறகு தன் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட நர்வால் திட்டமிட்டிருந்தார்.அதற்கு இப்படி ஆகிவிட்டதாக நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தார்கள்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications