டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக அணி திரட்டும் சரத் பவார்.. ஆரம்பமே சறுக்கல்.. மீட்டிங்கில் பலர் மிஸ்சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு குறைந்த அளவுக்கான தலைவர்களே வருகை தந்திருந்தனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் புதிய அணியை உருவாக்குவது தொடர்பாக சரத் பவார் தலைமையில் நேற்று முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அதேநேரம் எதிர்பார்த்த வெற்றியை இந்த கூட்டம் கொடுக்கவில்லை. சில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை, இன்னும் சில கட்சிகள் இரண்டாவது கட்ட தலைவர்களைத்தான் ஆலோசனைக் கூட்டத்திற்கு அனுப்பி வைத்தன.

தன் மீது நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர்ந்து வழக்குகள்.தன் மீது நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர்ந்து வழக்குகள்.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

சமீபத்தில் நடந்து முடிந்த, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆட்சியை பிடித்த திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாக திடீரென அவர் அறிவித்த நிலையில், பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை திடீரென சில தினங்கள் முன்பாக சந்தித்து பேசினார்.

லோக்சபா தேர்தல் திட்டங்கள்

லோக்சபா தேர்தல் திட்டங்கள்

லோக்சபா தேர்தலை ஒட்டி இப்போதே திட்டமிட்டு காய் நகர்த்த இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான், முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள யஷ்வந்த் சின்கா மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சியின் மூத்த தலைவர் ஜா ஆகியோருடனும் சரத் பவார் ஆலோசனை நடத்தினார்.

சரத் பவார் வீட்டில் ஆலோசனை

சரத் பவார் வீட்டில் ஆலோசனை

இதையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு சரத் பவார் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து நேற்று சரத் பவார் வீட்டில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதேநேரம், இந்த கூட்டத்திற்கு சரத் பவார் அழைப்பு விடுக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பு தெரிவித்தது.

திமுக, காங்கிரஸ் பங்கேற்கவில்லை

திமுக, காங்கிரஸ் பங்கேற்கவில்லை

அதேநேரம், திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை இந்த கூட்டத்திற்கு அனுப்பவில்லை. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா, ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி, ஆம் ஆத்மி கட்சியின் சுஷீல் குப்தா, கவிஞர் ஜாவீத் அக்தர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையலாளர் எஸ்.ஒய். குரேசி, முன்னாள் வெளியுறவு அதிகாரி கே.சி.சிங், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

முக்கிய தலைவர்கள் போகவில்லை

முக்கிய தலைவர்கள் போகவில்லை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், இ.கம்யூனிஸ்ட், தங்கள் ராஜ்யசபா உறுப்பினர் பினோய் விஸ்வமை அனுப்பி வைத்தது. மார்ஸ்சிஸ்ட் சார்பில், அதன் பொலிட் பீரோ உறுப்பினர் நிலோட்பால் பாசு பங்கேற்றார்.

English summary
A small number of leaders attended the opposition's consultative meeting at the residence of Nationalist Congress Party leader Sharad Pawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X