கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஒன்றுபடுவோம் - பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் தசரா, தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
டெல்லி: கொரோனா விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கினார் மோடி. கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு ஒன்றுபடுவோம் என மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாஸ்க் அணியுங்கள், கைகளை சுத்தமாக வைத்திருங்கள். என ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்தியா மக்களிடம் கொரோனா விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு ஜன் அந்தோலன் என்கிற மக்கள் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் பண்டிகை நாட்கள் தொடங்க உள்ளதால் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 68 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 58 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,94,321 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனால் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 8.34 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 83,011 பேர் குணமடைந்த நிலையில், 78,524 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,27,704ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குணமடைந்தோர் சதவிகிதம் 85.25 சதவிகிதமாக உள்ளது.
आइए, कोरोना से लड़ने के लिए एकजुट हों!
— Narendra Modi (@narendramodi) October 8, 2020
हमेशा याद रखें:
मास्क जरूर पहनें।
हाथ साफ करते रहें।
सोशल डिस्टेंसिंग का पालन करें।
‘दो गज की दूरी’ रखें।
#Unite2FightCorona pic.twitter.com/L3wfaqlhDn
கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, 971 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 17 நாட்களாக 10 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. நாட்டில் தற்போது 9,02,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications