''காண்டாமிருகத்தை சுரண்டி பார்த்த சிங்கம்'' அப்புறம் நடந்ததுதான் டுவிஸ்ட் . . தீயாக பரவும் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காண்டா மிருகத்தை சிங்கம் ஒன்று தொட்டு விட்டு ஓடும் காட்சியை ஐ.எப்.எஸ் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இணைய உலகில் எப்போதும் வன விலங்குகள் குறித்த வீடியோக்களுக்கு தனி வரவேற்பு உண்டு.

அதிலும் வனவிலங்குகள் தங்களுக்குள் கொஞ்சிக் கொள்வது போன்ற வீடியோ, உணவுக்காக பிற உயிரினங்களை வேட்டையாடுவது போன்ற வீடியோ பெரும்பாலானோருக்கு பிடிக்கும்.

 அப்படி என்னதான் இருக்கு . .

அப்படி என்னதான் இருக்கு . .

இது மாதிரியான வன விலங்குகளின் வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களுக்கு விருந்தளிக்கும். இப்படிதான் ஐ.எப். எஸ் அதிகாரி சுஷாந்த நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஐ.எப்.எஸ் அதிகாரி தனது டிவிட்டர் பக்கத்தில் 8 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு காண்டா மிருகங்கள் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது காண்டா மிருகங்களுக்கு தெரியாமல் மெதுவாக பூனை நடைபோட்டு வரும் 2 சிங்கங்கள் காண்டா மிருகத்தை மிக நெருங்கி வந்து நிற்கின்றன.

 சும்மா தொட்டு பார்ப்போம்

சும்மா தொட்டு பார்ப்போம்

அப்போது ஒரு சிங்கம் நமக்கெதுக்கு வம்பு என சாதுவாக அந்த பக்கம் திரும்பி நிற்கிறது. மற்றொரு சிங்கமோ சும்மா இருக்காமல், தனது முன்காலை எடுத்து அங்கு மேய்ந்துகொண்டிருந்த காண்டா மிருகத்தை சும்மா தொட்டு பார்ப்போம் என்ற தொனியில், மெதுவாக தொட்டு பார்க்கிறது. புற்களை மிகவும் ரசித்து ருசித்து மேய்ந்து கொண்டிருந்த காண்டா மிருகம், யாரப்பா இந்த நேரத்தில்? என சலிப்போடு திரும்பி பார்க்கிறது. காண்டா மிருகம் திரும்பியதுதான் தாமதம், எடுடா ஓட்டத்தை என்ற தொனியில், சிங்கங்கள் இரண்டும் ஒரே ஓட்டமாய் அங்கிருந்து ஓடி மறைந்து விடுகின்றன.

 டிரெயினிங்கில கூட இப்படி ஓடலடா

டிரெயினிங்கில கூட இப்படி ஓடலடா

இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழே, மிகவும் சுவாரசியமாக தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். காண்டா மிருகங்களை தொந்தரவு செய்ய முடியுமா? என்று சிங்கங்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொண்டனவோ என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். போலீஸ் டிரெயினிங்கில் கூட இப்படி நான் ஓடலடா? என வடிவேலு ஒரு படத்தின் காமெடியில் கூறுவார். இதைக்குறிப்பிடும் வகையிலும் நெட்டிசன்கள் பலர் ஜாலியாக பதிவிட்டு இந்த வீடியோவை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

 ரசிக்கும் படியான வீடியோக்கள்

ரசிக்கும் படியான வீடியோக்கள்

ஒடிசாவை சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி சுசாந்த நந்தா, வன விலங்குகள் குறித்த வீடியோவை பதிவிடுவது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற ரசிக்கும் படியான பல வீடியோக்களை இவர் பகிர்ந்துள்ளார். அவையும் இணையத்தில் ஹிட் அடிக்கும். மத்திய பிரதேச வன விலங்குகள் சரணாலயத்தில் இரண்டு புலிகள் ஒன்றோடு ஒன்று கட்டிப்புரண்டு விளையாடிக்கொண்டு இருந்த காட்சிகளை அண்மையில் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்தக் காட்சிகளும் இணையத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+