'ஜல்சா பவன்களா' ஆளுநர் மாளிகைகள்? சென்னாரெட்டி, என்டி திவாரி, சண்முகநாதன், பன்வாரிலால்... ஆனந்த போஸ்!
டெல்லி: ஆளுநர் மாளிகைகள் பாலியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே ஆளுநர்களாக இருந்த சென்னா ரெட்டி, பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாட்டை சேர்ந்த சண்முகநாதன், ஆந்திராவில் என்டி திவாரி வரிசையில் தற்போது மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்ப் என்ற அளவில் செயல்பட்டு வந்த காலம் மாறிவிட்டது. இப்போது ஆளுநர்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக மாநில அரசுகளின் விவகாரங்களில் தலையிடுவது, உச்சநீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வது என்ற வகையில் ஆளுநர்களும் தலைப்புச் செய்திகளாகின்றனர்.

இன்னொரு பக்கம், பாலியல் சர்ச்சைகளில் ஆளுநர்கள் சிக்கிக் கொள்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஆளுநர்களும் சில பாலியல் சர்ச்சைகளின் விவகாரங்களும்:
சென்னாரெட்டி: 1991-96-ல் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் சென்னாரெட்டி. தமிழ்நாட்டில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆளுநர் சென்னா ரெட்டி தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக சட்டசபையிலேயே கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
என்டி திவாரி: 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி. திவாரி ஆந்திராவின் ஆளுநராக இருந்த போது பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாக போட்டோக்கள் வெளியாகின. இது ஒட்டுமொத்தமாக நாட்டையே உலுக்கிவிட்டது. இதனால் என்டி திவாரி பதவியை ராஜினாமா செய்தார்.
ஆர்.எஸ்.எஸ்.சண்முகநாதன்: சில ஆண்டுகளுக்கு முன்னர் மேகாலயா ஆளுநராக தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேந்த சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். ஆனால் மேகாலயா ராஜ்பவனையே ஆளுநர் சண்முகநாதன் லேடீஸ் கிளப்பாக மாற்றிவிட்டதாக புயலைக் கிளப்பின புகார்கள். இதனால் பாஜகவும் மத்திய அரசும் அதிர்ந்து போயின. இதனை சமாளிக்கவே முடியாமல் சண்முகநாதன் தமது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டுக்கே திரும்பினார்.
பன்வாரிலால் புரோஹித்: தமிழ்நாட்டு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்த போது இதேபோல பாலியல் சர்ச்சைகள் வெடித்தன. பேராசிரியர் நிர்மலா தேவி இது தொடர்பான விவகாரங்களில் சிக்கி தற்போது 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.
ஆனந்த போஸ்: தற்போது மேற்கு வங்க முதல்வர் ஆனந்த போஸ், பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆளுநர் மாளிகையிலேயே பணியாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவரே இந்தப் புகாரை தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே பெரும் மோதல் வெடித்திருக்கிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications