2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் அகில இந்திய கல்வியறிவு விகிதம் 73.0%- மத்திய அரசு!
டெல்லி: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 68.5% ஆகும்; அகில இந்திய கல்வியறிவு விகிதம் 73.0% ஆகும்; 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடையே கல்வியறிவு விகிதம் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் கேள்விகளுக்கு மத்திய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள்:

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 59.1% ஆகவும், அதே வயதினருக்கான அகில இந்திய கல்வியறிவு விகிதம் 64.8% ஆகவும் இருந்தது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கல்வியறிவு விகிதம் 68.5% ஆகும். அகில இந்திய கல்வியறிவு விகிதம் 73.0% ஆகும். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களிடையே கல்வியறிவு விகிதம் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆண்டு அறிக்கையான, பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே, 2023-24 படி, முஸ்லிம்களிடையே கல்வியறிவு விகிதம் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 79.5% ஆகவும், அதே வயதினருக்கான அனைத்து மதங்களைச் சேர்ந்தோரின் கல்வியறிவு விகிதம் 80.9% ஆகவும் உள்ளது.
அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களான புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சமணர்கள், முஸ்லிம்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரின் நலன் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்கும் பணியை சிறுபான்மையினர் நல அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. கல்வி அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதார அதிகாரமளித்தல், சிறப்புத் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் சிறுபான்மை நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி சிறுபான்மை சமூகங்களின் வளர்ச்சிக்கான உத்தியை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
2021-22 -ம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி, அகில இந்திய தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தின் மதிப்பீடுகள் - மக்கள் தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது. 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளிகளாகச் சேர்வது படிப்படியாக அதிகரிப்பதைக் காட்டுகின்றன.
2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்வி பயிலுங்கள் மற்றும் வருவாய் ஈட்டுங்கள் (சீகோ அவுர் கமாவோ) திட்டம், சிறுபான்மை இளைஞர்களின் (14-45 வயது) கல்வித் தகுதி, நிலவும் பொருளாதார போக்குகள் மற்றும் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நவீன / பாரம்பரிய திறன்களில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்திட்டத்தின் கீழ், 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றனர். இது மொத்த பயனாளிகளில் 57.64% ஆகும்.
உஸ்தாத் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. முதன்மை கைவினைஞர்கள் / கைவினைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பாரம்பரிய திறன்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டது. இத்திட்டத்தின் கீழ், 19,255 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 89.10% ஆகும்.
முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மையின இளைஞர்கள் பயனடையும் நோக்கத்துடன் நயி மன்சில் திட்டம் 2014-15 முதல் 2020-21 வரை செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் கலவையை வழங்கியது மற்றும் பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேட உதவியது. இத்திட்டத்தின் கீழ், 54,233 பெண்கள் பயிற்சி பெற்றனர், இது மொத்த பயனாளிகளில் 54.94% ஆகும்.
சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த, சமுதாயத்தில் தனிச் சலுகை இல்லாத பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நல அமைச்சகம் மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள ஆறு சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளித்தலுக்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகமானது சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டும் முயற்சிகளுக்கு சலுகைக் கடன்களை வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிக்கிறது. இந்தக் கழகம் காலவரம்புக் கடன், குறு நிதி, கல்விக் கடன் மற்றும் விராசாட் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகள் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் நியமிக்கப்பட்ட மாநில முகமைகள், பஞ்சாப் கிராமிய வங்கி, கனரா வங்கி மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
1994-95ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 28.02.2025 வரை சலுகைக் கடனாக ரூ.9485.04 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த 25.49 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். முஸ்லிம் பெண்கள் உட்பட சுமார் 89.68% பெண் பயனாளிகளுக்கு தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக்கழகம் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, இது அவர்களின் வாழ்வாதாரத்தில் கணிசமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications