டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இத்தனை விதிகளா? அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இனி இப்படித்தான் இயங்கும்.. மத்திய அரசின் புது விதிமுறை!

கொரோனா பரவலுக்கு இடையே தற்போது செயல்பட தொடங்கி உள்ள அலுவலகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவலுக்கு இடையே தற்போது செயல்பட தொடங்கி உள்ள அலுவலகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

Recommended Video

    அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இனி இப்படித்தான் இயங்கும்.. மத்திய அரசின் புதிய உத்தரவு

    லாக்டவுன் 4.0ல் இந்தியா முழுக்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதி இல்லாத மற்ற இடங்களில் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நிறுவனங்கள் இயங்க தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு தடுப்பூசி தேவையில்லை.. கொரோனா பரவாமல் தடுக்க மருந்து இருக்கிறது.. சீன ஆய்வகம் அறிவிப்பு

    கட்டாயமான விதிகள்

    கட்டாயமான விதிகள்

    • அதன்படி பின்வரும் விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
    • முடிந்த அளவு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.
    • அனைத்து நிறுவனங்களிலும் தெர்மல் சோதனை கருவிகள் இருக்க வேண்டும்.
    • எல்லா அலுவலகத்திலும் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.
    • அதேபோல் குறைந்த அளவில் பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிக்கு அழைக்கலாம்.
    • உணவு இடைவேளை ஒரே நேரத்தில் இருக்க கூடாது . ஒரே நேரத்தில் ஒன்றாக கூட கூடாது.
    • பணியாளர்கள் 40-60நிமிடத்திற்கு ஒருமுறை கை கழுவ வேண்டும்.
    • எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தனிப்பட்ட வகையில் பணியாளர்களின் உடல் நிலையை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும்.
    அலுவலகங்களுக்கான தடுப்பு வழிகள்

    அலுவலகங்களுக்கான தடுப்பு வழிகள்

    • காய்ச்சல் இருக்கும் நபர்கள் அலுவலகம் வர கூடாது
    • காய்ச்சல் உள்ளவர்கள் உடனே மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்ய வேண்டும்
    • கொரோனா உறுதியானால் உடனே அலுவலகத்திடம் அறிவிக்க வேண்டும்
    • உடல்நிலை சரியாக இல்லாத நபர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்
    கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது

    கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது

    • அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவரை தனிமைப்படுத்த வேண்டும்.
    • அவருக்கு மாஸ்க் கொடுத்து தனியறையில் வைக்க வேண்டும்.
    • மருத்துவருக்கு போன் செய்து அலுவலகம் வர வைக்கலாம்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • 1075 என்ற மத்திய அரசின் இலவச உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
    • அதன்பின் அவரின் உடல்நிலையை பொறுத்து முடிவு எடுக்கலாம்
    அலுவலகத்தை மூடுதல்

    அலுவலகத்தை மூடுதல்

    • அலுவலகத்தில் ஒருவருக்கு மட்டும் கொரோனா ஏற்பட்டால் மொத்தமாக அலுவலகத்தை மூட வேண்டியது இல்லை.
    • அலுவலகம் முழுக்க கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்.
    • ஆனால் அலுவலகத்தில் நிறைய பேருக்கு கொரோனா ஏற்பட்டால் உடனடியாக அலுவலகத்தை மூட வேண்டும். கொரோனா ஏற்படாத மற்ற நபர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

    English summary
    Lockdown 4.0: New Guidelines for companies and factories released by MHC amid raise in Coronavirus cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X