234/234 ரிசல்ட்: 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக.. எந்தக் கட்சிக்கு எத்தனை சீட்? முழு விவரம் இங்கே!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கட்சிகள் பெற்ற சீட்களின் எண்ணிக்கை விவரங்களைப் பார்க்கலாம்.
கூட்டணி வாரியாக வெற்றி பெற்ற சீட்களின் விவரம் பின்வருமாறு:
தவெக- 108 தொகுதிகள்
திமுக கூட்டணி- 73 தொகுதிகள்
அதிமுக கூட்டணி- 53 தொகுதிகள்
நாதக - 0

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக 59 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விசிக 2 தொகுதிகளிலும், தேமுதிக 1 தொகுதியிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 சீட்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 47 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும், அமமுக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்கு சதவீதம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 34.95 சதவீத வாக்குகளும், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 31.38 சதவீத வாக்குகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 27.40 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
கட்சியாக வாரியாக பெற்ற வாக்குகள் எண்ணிக்கை மற்றும் சதவீதம் பின்வருமாறு:
* திமுக பெற்ற வாக்குகள் - 1,19,28,996 (24.19%)
* அதிமுக பெற்ற வாக்குகள் - 1,04,62,146 ( 21.21%)
* தவெக பெற்ற ஓட்டுகள்- 1,72,26,030 (34.92%)
* நாதக பெற்ற மொத்த ஓட்டுகள்- 19,72,520 (4%)
திமுக வெற்றி பெற்ற 59 தொகுதிகள்
துறைமுகம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
ஆம்பூர்
வேப்பனஹள்ளி
திருவண்ணாமலை
வந்தவாசி
வானூர்
விழுப்புரம்
உளுந்தூர்பேட்டை
ரிஷிவந்தியம்
கூடலூர்
குன்னூர்
கோவை தெற்கு
பொள்ளாச்சி
வால்பாறை
உடுமலைப்பேட் டை
மடத்துக்குளம்
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
திண்டுக்கல்
வேடசந்தூர்
அரவக்குறிச்சி
குளித்தலை
திருச்சி மேற்கு
மணச்சநல்லூர்
குன்னம்
திட்டக்குடி
குறிஞ்சிப்பாடி
சிதம்பரம்
சீர்காழி
பூம்புகார்
நாகப்பட்டினம்
திருவாரூர்
திருவிடைமருதூர்
திருவையாறு
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
பேராவூரணி
புதுக்கோட்டை
திருமயம்
ஆலங்குடி
திருமங்கலம்
ஆண்டிபட்டி
போடிநாயக்கனூர்
சாத்தூர்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
பரமக்குடி
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
திருச்செந்தூர்
கோவில்பட்டி
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
தென்காசி)
ஆலங்குளம்
பாளையங்கோட்டை
நாகர்கோவில்
அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகள்
திருத்தணி
செய்யூர்
மதுராந்தகம்
ஆற்காடு
அணைக்கட்டு
ஜோலார்பேட்டை
பர்கூர்
ஓசூர்
பாலக்கோடு
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
செங்கம்
கீழ் பெண்ணாத்தூர்
கலசப்பாக்கம்
ஆரணி
செய்யாறு
மயிலம்
திருக்கோவிலூர்
சங்கராபுரம்
கெங்கவல்லி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலூர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
பரமத்தி-வேலூர்
தாராபுரம்
காங்கேயம்
பெருந்துறை
பவானி
அந்தியூர்
தொண்டாமுத்தூர்
பழனி
நத்தம்
கரூர்
லால்குடி
அரியலூர்
நெய்வேலி
பண்ருட்டி
புவனகிரி
வேதாரண்யம்
நன்னிலம்
விராலிமலை
சங்கரன்கோவில்
அம்பாசமுத்திரம்
கன்னியாகுமரி
மற்ற 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications