மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து.. மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம்.. மத்திய அரசு அளித்த அதிகாரம்
டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக கொரோனா லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் மாநில அரசிற்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் மற்றும் அனுமதிகளை வழங்கி உள்ளது.

போக்குவரத்து எப்படி
அதன்படி மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகள் தங்களின் வசதிக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். பேருந்து போக்குவரத்து தொடங்கி தனியார் போக்குவரத்து தொடர்பாகவும் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

யூனியன் பிரதேச அனுமதி
யூனியன் பிரதேச முதல்வர்களும் இந்த அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் இடையிலான ஆலோசனையில் இது தொடர்பான விவாதம் செய்துள்ளனர். இதனால் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசிற்கு அனுமதி
அதே சமயம் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களுக்குள் நிலைமை பொறுத்து கொரோனா லாக்டவுன் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள முடியும். ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்து இருக்கும் கட்டுப்பாடுகளை மீற கூடாது. இதனால் விரைவில் மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது.

வடகிழக்கு மாநில வசதி
இதன் மூலம் பிற மாநில தொழிலாளர்கள் எளிதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். அதேபோல் கொரோனா பாதிப்பு இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. கர்நாடகா ஆந்திரா இடையிலும் பேருந்து சேவை தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் பெரிய அளவில் தளர்வுகள் வரும் என்கிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications