கூட்டணிக்குள் புயல்.. அக்னிபாத் திட்டத்திற்கு என்டிஏவில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி எதிர்ப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக குரலெழுப்ப தொடங்கியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியில் பாஜக தனியாக 240 இடங்களையும் கூட்டணியுடன் 293 தொகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அதைவிட கூடுதல் தொகுதிகளை பாஜக பெற்றிருப்பதால், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு அவர் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியுள்ளன. குறிப்பாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக குரலெழுப்பியுள்ளன. பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி, "அக்னிபாத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார். பீகாரில் என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட இந்த கட்சி 5 தொகுதிகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பாஜக ஆட்சியே அமைக்காத நிலையில், அதற்குள் கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியிருப்பது பாஜக தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம். அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த நான்கு ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு, மீதமுள்ள 75% பேர் வெளியேற்றப்படுவார்கள். இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.
ஆனால், இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இது இந்தி திட்டத்தின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிகபட்ச உயிர் தியாகத்தை கோரும் இந்த பணியில் ஓய்வூதியம் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications