Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தின் பலம் 543ல் இருந்து 816ஆக உயரும். இதில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும் என்ற போதிலும், உண்மையான பவர் வடக்கு நோக்கிப் போகலாம் எனத் தென் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. இதற்குத் தென் மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்தாலும் கூட தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாகவே உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்ய மத்திய அரசு விரும்புகிறது.

Lok Sabha delimitation How Proposed 816 Seat Could Change States Weightage and affect south

லோக்சபா எண்ணிக்கை

அதன்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 543லிருந்து சுமார் 816ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு 33% பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ள நிலையில், 273 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும். அதேபோல இது நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் பலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி விகிதாச்சாரத்தைத் தக்கவைக்க அரசு திட்டமிட்டிருந்தாலும், இந்த விரிவாக்கத்தால் பெரிய மாநிலங்களில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. இப்போது இருக்கும் அதே விகிதத்தில் தொகுதிகள் அதிகரிக்கப்படும். இதனால் எந்த மாநிலமும் தனது பிரதிநிதித்துவத்தை உடனடியாக இழக்காது என்ற போதிலும் இதன் அரசியல் தாக்கம் மெல்லத் தெரிய ஆரம்பிக்கும்.

இந்தி மாநிலங்கள்

விகிதாச்சார உயர்வின்படி, இந்தி பேசும் மாநிலங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையே கணிசமாக உயரும்.

  • உத்தரப் பிரதேசம்- 80இல் இருந்து 120ஆக உயரும்
  • பீகார்- 40லிருந்து 60 ஆகவும் உயரும்
  • மத்தியப் பிரதேசம்- 29-லிருந்து 43 முதல் 44 ஆக உயரும்
  • ராஜஸ்தான்- 25-லிருந்து 37-38 ஆகவும் உயரும்.

மக்களவையில் ஏற்கனவே இந்தி மாநிலங்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ள சூழலில், இந்த விவாதமாக மாறியுள்ளது.

மேற்கு மற்றும் மத்திய மாநிலங்கள்

  • மகாராஷ்டிரா- 48ல் இருந்து 72ஆக உயரும்
  • குஜராத்- 26-லிருந்து 39 ஆக உயரும்
  • சத்தீஸ்கர்- 11-லிருந்து 16-17 ஆக உயரும்

அதே விகிதாச்சாரம் பின்பற்றப்படும் என்பதால் இப்போது இருப்பதைப் போலவே உத்தரப் பிரதேசத்திற்குப் பிறகு அதிக எம்பிக்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து இருக்கும்.

கிழக்கு மாநிலங்கள்

  • மேற்கு வங்கம்- 42-லிருந்து 63 ஆக உயரும்
  • ஒடிசாவின் தொகுதிகள் 21-லிருந்து 31 முதல் 32 ஆக உயரும்
  • ஜார்க்கண்ட்- 14-லிருந்து 21 ஆகவும் அதிகரிக்கும்

இதன் மூலம் உபி, மகாராஷ்டிராவுக்குப் பிறகு அதிக எம்பிக்களை கொண்ட 3வது பெரிய மாநிலமான மேற்கு வங்கம் நீடிக்கும். இதனால் அங்கு அதிக இடங்களில் வெல்வது முக்கியத்துவம் பெறும்!

தென் மாநிலங்கள்

  • தமிழ்நாடு- 39-லிருந்து 58-59 தொகுதிகளாக உயரும்
  • கர்நாடகா- 28-லிருந்து 42 ஆக அதிகரிக்கும்
  • ஆந்திரப் பிரதேசம்- 25-லிருந்து 37-38 ஆக உயரும்
  • தெலுங்கானா- 17-லிருந்து 25-26 ஆக உயரும்
  • கேரளா- 20-லிருந்து 30 ஆகவும் தொகுதிகள் உயரும்.

தென் மாநிலங்களுக்கு நம்பர் அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் பிரதிநிதித்துவ விகிதம் குறையலாம் என்று சிலர் கவலை எழுப்பியுள்ளனர். ஏற்கனவே தென் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் இதை விமர்சித்து வருகிறார்கள்.

இதர மாநிலங்கள்

வடக்கு மற்றும் சிறிய மாநிலங்களான பஞ்சாப் 13-லிருந்து 19-20, ஹரியானா 10-லிருந்து 15, டெல்லி 7-லிருந்து 10-11, உத்தரகாண்ட் 5-லிருந்து 7-8 ஆக உயரும். 4" data-popupmenu="popmenu14">இமாச்சலப் பிரதேசத்தில் 4-லிருந்து 6 தொகுதிகள் என அதிகரிக்கும். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை அசாம் 14-லிருந்து 21 தொகுதிகளாக உயரும்; மணிப்பூர், மேகாலயா போன்ற பிற வடகிழக்கு மாநிலங்கள் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் தொகுதிகளைப் பெறும். யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற அதிகரிப்பு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

பவர் மாறும்?

விகிதாச்சாரங்கள் மாறாவிட்டாலும், பெரிய மாநிலங்கள் தொகுதிகளைக் கணிசமாகப் பெற்று, ஆட்சி அமைப்பதில் அவற்றின் பங்கை அதிகரிக்கும். பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 272-லிருந்து 408 ஆக உயரும். இதனால், கட்சிகள் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்க வேண்டி இருக்கும். விகிதாச்சாரம் மாறவில்லை என்றாலும் இந்த தொகுதி மறுசீரமைப்பு, அரசியல் பலத்தை வடக்கை நோக்கி நகர்த்தக்கூடும் மேலும் என தென் மாநிலங்கள் கவலை தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+