3ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 11 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று 3 ஆம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 11 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பதினெட்டாவது மக்களவைக்கான 543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

Lok Sabha Election 2024 3rd phase of election is being held today in 10 states including Uttar Pradesh

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளிலும், 26ஆம் தேதி 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள நான்கு தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஏழு தொகுதிகள், தத்ரா நகர் ஹவேலி மற்றும் டையு டாமன் யூனியன் பிரதேசங்களில் இரண்டு தொகுதி, கோவாவில் இரண்டு தொகுதி, குஜராத்தில் 23 தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பது தொகுதி, மகராஷ்டிரா மாநிலத்தில் 11 தொகுதி, உத்தரப்பிரதேசத்தில் பத்து தொகுதிகள் மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், சுப்ரியா சூலே உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களோடு 1352 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இந்நிலையில் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றது.

வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களிப்பதை காண முடிந்தது. . அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

குஜராத்தில் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எனவே அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் பெதோல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் காலமானதால் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்த தேர்தல் இன்று நடந்தது.

மேலும் இன்று தேர்தல் நடக்க ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் தேர்தல் நடக்க இருந்த நிலையில் பனிபொழிவு காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காலை7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து உள்ளனர். அந்த வகையில் இரவு 11 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மாநிலங்கள் வாரியாக அசாம் - 81.61, பீகார்- 58.18, சத்தீஸ்கர்- 71.06, தாத்ரா அண்ட் நகர் ஹாவேலி மற்றுமு் டாமன் - டையூவில் 69.87, கோவா- 75.20, குஜராத்- 58.98 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

அதேபோல் கர்நாடகா- 70.41, மத்திய பிரதேசம்- 66.06, மகாராஷ்டிரா- 61.44, உத்தர பிரதேசம்- 57.34, மேற்கு வங்கம்- 75.79 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+