5-வது கட்ட லோக்சபா தேர்தல்: 8 மாநிலங்கள், 49 தொகுதிகளில் ராகுல் உட்பட 695 பேர் போட்டி!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலின் 5-வது கட்டமாக 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் மொத்தம் 695 பேர் போட்டியிடுகின்றனர்.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 தேதிகளில் 3 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மே 13-ந் தேதி 4-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலில் மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ள 5-வது கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்காக 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் மொத்தம் 1586 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 3-ந் தேதியாகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 749 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது.
ஐந்தாம் கட்டத்தில், மகாராஷ்டிராவில் 13 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 512 வேட்பு மனுக்களும் உத்தரப்பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 466 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. ஐந்தாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 14 ஆகும்.
5-வது கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: பீகார், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், மகாராஷ்டிரா, ஒடிஷா, உ.பி, மேற்கு வங்கம்,
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 5-வது கட்டமாக மே 20-ந் தேதி இத்தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications