ரேபரேலி, அமேதி வேட்பாளர்கள் யார்? என்னத்துக்கு இவ்ளோ சஸ்பென்ஸ்.. கடுப்பாகும் உ.பி. காங்கிரஸ்!
டெல்லி: லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என அறிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
18-வது லோக்சபா நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26-ல் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 1-ந் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

மே 20-ந் தேதி 5-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நேரு குடும்பத்தின் பாரம்பரிய வாக்கு வங்கியை கொண்ட அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மே 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய மே 3-ந் தேதிதான் கடைசி நாள்.
ஆனால் அமேதி, ரேபரேலி லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் இன்னமும் அறிவிக்கவில்லை. வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, அமேதியிலும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு பதில் அவரது மைத்துனரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ரேபரேலியில் போட்டியிட்ட சோனியா காந்தி தற்போது ராஜ்யசபா எம்பியாகிவிட்டார். அத்தொகுதியில் பிரியங்கா காந்தி களம் காணக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் ரேபரேலியில் ராபர்ட் வதேராவும் அமேதியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் கூட போட்டியிடலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 10 நாட்களாகவே அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் கட்சி இன்றைக்கு முடிவு எடுக்கும் என்றே ஊடகங்களும் எழுதி வருகின்றன. ஆனாலும் காங்கிரஸ் மேலிடம் ஏதோ ஒரு காரணத்துக்காக இவ்வளவு சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த புதிரான நடவடிக்கையால் உத்தரப்பிரதேசத்தில் ஏதோ ஒன்றிரண்டு தொகுதிகளையாவது வெல்வோம் என்ற ஆர்வத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினரும் சோர்வடைந்து போய்வருவதாகவும் கூறப்படுகிறது. ரேபரேலி, அமேதி தொகுதிகளின் வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் விரைவாக அறிவித்து சஸ்பென்ஸ் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது உ.பி. காங்கிரசாரின் வேண்டுகோள்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications