2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
டெல்லி: நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலின் 2-வது கட்டமாக கர்நாடகா, கேரளா உட்பட 13 மாநிலங்களில் மொத்தம் 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் முதல் கட்டமாக 14 தொகுதிகளில் தேர்தல் நாளை நடைபெறுகிறது. 88 தொகுதிகளிலும் மொத்தம் 1210 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
2-ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் மாநிலங்களும் தொகுதிகள் விவரங்களும்:

கேரளா 20
கர்நாடகா 14
ராஜஸ்தான் 13
உத்தரபிரதேசம் 8
மகாராஷ்டிரா 8
மத்திய பிரதேசம் 6
பீகார் 5
அஸ்ஸாம் 5
சத்தீஸ்கர் 3
மேற்கு வங்கம் 3
திரிபுரா 1
ஜம்மு-காஷ்மீர் 1
மணிப்பூர்- 1
அஸ்ஸாம்: கரீம்கஞ்ச், சில்சார், மங்கல்டோய், நவ்காங், கலியாபோர்
பீகார்: கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்னியா, பாகல்பூர்
சத்தீஸ்கர்: ராஜ்நந்த்கான், மஹாசமுந்த், காங்கர்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு
கர்நாடகா: உடுப்பி சிக்கமகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூர், சாம்ராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்தி, பெங்களூர் தெற்கு, சிக்பல்லாபூர், கோலார்
கேரளா: காசர்கோடு, கண்ணூர், வடகரா, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பொன்னானி, பாலக்காடு, ஆலத்தூர், திருச்சூர், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, மாவேலிக்கரா, பத்தனம்திட்டா, கொல்லம், அட்டிங்கல், திருவனந்தபுரம்
மணிப்பூர்: அவுட்டர் மணிப்பூர்
மத்தியப் பிரதேசம்: திகம்கர், தமோஹ், கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத்
மகாராஷ்டிரா: புல்தானா, அகோலா, அமராவதி, வார்தா, யவத்மால் வாஷிம், ஹிங்கோலி, நாந்தேட், பர்பானி
ராஜஸ்தான்: டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான்
திரிபுரா: திரிபுரா கிழக்கு
உத்தரபிரதேசம்: அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கவுதம் புத்த நகர், புலந்த்ஷாஹர், அலிகார், மதுரா
மேற்கு வங்காளம்: டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்காட்
களத்தில் 1210 வேட்பாளர்கள்: லோக்சபா இரண்டாம் கட்டத் தேர்தலில் 1210 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர். இந்தத் தொகுதிகளில் மொத்தம் 2633 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் 2-ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4. தாக்கல் செய்யப்பட்ட 2633 வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில் 1428 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என கண்டறியப்பட்டது. இம்மாநிலங்களில் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 8-ம் தேதி. கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக 500 பேரும், கர்நாடகாவில் 14 மக்களவைத் தொகுதிகளில் 491 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் தொகுதியில் அதிகபட்சமாக 92 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் அசாமில் 5 தொகுதிகளுக்கு 118 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 62 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனுக்கள் திரும்ப பெறும் அவகாசம் முடிந்ததற்கு பின்னர் 61 பேர் களத்தில் உள்ளனர். பீகாரில் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்டத் தேர்தலுக்கு 46 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 55 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. களத்தில் 50 பேர் உள்ளனர்.
சத்தீஷ்கரில் 3 தொகுதிகளில் 41 பேர் களத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தின் 14 தொகுதிகளில் 247 பேரும், மத்தியப்பிரதேசத்தின் 7 தொகுதிகளில் 88 பேரும், மஹாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் 204 பேரும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் 152 பேரும், திரிபுராவில் ஒரு தொகுதியில் ஒன்பது பேரும் களம் காண்கின்றனர்.
கேரளாவில் 194 பேர் போட்டி: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 500 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்த்தில் 204 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்கள் திரும்ப பெறப்பட்ட பின்னர் 194 பேர் போட்டியிடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 91 பேரும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் 47 பேரும் களத்தில் உள்ளனர். முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்கள் மற்றும யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் 1625 பேர் போட்டியிட்டனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 1491 பேர், பெண் வேட்பாளர்கள் 134 பேர்.
விஐபி வேட்பாளர்கள் கேரளா: காங்கிரஸின் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சசி தரூர், கே.முரளீதரன், கே.சுதாகரன், சிபிஎம் வேட்பாளர்கள் எளமரம் கரீம், கே.கே.ஷைலஜா, சி.ரவீந்திரநாத், எம்.வி.ஜெயராஜன்; பாஜகவின் கே சுரேந்திரன், சுரேஷ் கோபி, வி முரளீதரன், அனில் ஆண்டனி மற்றும் ராஜீவ் சந்திரசேகர், துஷார் வேலப்பள்ளி (பிடிஜேஎஸ்), பிரான்சிஸ் ஜார்ஜ் (கேரள காங்கிரஸ்), என்கே பிரேமச்சந்திரன் (ஆர்எஸ்பி), முகமது பஷீர் (முஸ்லிம் லீக்) மற்றும் ஆனி ராஜா (சிபிஐ).
கர்நாடகா: பாஜக ஷோபா கரந்த்லாஜே, தேஜஸ்வி சூர்யா, பிசி மோகன், சிஎன் மஞ்சுநாத், கோவிந்த் கர்ஜோல், காங்கிரஸ் டி.கே.சுரேஷ், ராஜீவ் கவுடா, சவுமியா ரெட்டி, பி.என்.சந்திரப்பா, ஜெயபிரகாஷ் ஹெக்டே, ஸ்ரேயாஸ் பட்டேல் கவுடா; மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா
ராஜஸ்தான்: பாஜகவின் கஜேந்திர சிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்ரி, சந்திர பிரகாஷ் ஜோஷி, ஓம் பிர்லா, துஷ்யந்த் சிங்; காங்கிரஸ் சிபி ஜோஷி, வைபவ் கெலாட், பிரஹலாத் குஞ்சால், உதய் லால் அஞ்சனா
உத்தரபிரதேசம்: ஹேமா மாலினி (பாஜக), மகேஷ் சர்மா (பாஜக), அமர்பால் சர்மா (எஸ்பி), அருண்கோவில் (பாஜக), டேனிஷ் அலி (காங்கிரஸ்), சதீஷ் குமார் கவுதம் (பாஜக)
மத்தியப் பிரதேசம்: பாஜகவின் வீரேந்திர குமார் காதிக், வி.டி.சர்மா, காங்கிரஸ் கட்சியின் தர்வர் சிங் லோதி, சித்தார்த் சுக்லால் குஷ்வாஹா
சத்தீஸ்கர்: காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல்.
மத்திய பிரதேசத்தின் பெதுல் லோக்சபா தொகுதியில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி காலமானதால் மே 7-ந் தேதிக்கு வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications