அய்யோ பாவமா? அதிரடியா? மாமியாரை தொடர்ந்து ராஜ்யசபா எம்பியாகும் சோனியா- ரேபரேலியில் பிரியங்கா போட்டி?
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. சோனியாவின் மகன் ராகுல் காந்தி ஏற்கனவே நேரு குடும்பத்தின் கோட்டைகளில் ஒன்றான அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது நேரு குடும்பத்தின் மற்றொரு கோட்டையான ரேபரேலி தொகுதியையும் கைவிட்டு ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சோனியா காந்தி.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தது காங்கிரஸ் கட்சி. நேரு குடும்பத்தின் சொத்துகளைப் போல ரேபரேலி, அமேதி தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புகளை அள்ளி அள்ளி கொடுத்தன.

ரேபரேலி தொகுதி: 1952, 1957-ம் ஆண்டுகளில் நேருவின் மருமகனும் இந்திரா காந்தியின் கணவருமான ஃபெரோஸ் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அதன் பின்னர் 1967, 1971 லோக்சபா தேர்தல்களில் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார். 1980-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியே வென்றார். 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றவர் சோனியா காந்தி. இத்தொகுதியில் சோனியா காந்தி 50% முதல் 80% வாக்குகள் வரை பெற்றவர்.
அமேதி தொகுதி: ரேபரேலியைப் போல உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியும் நேரு குடும்பத்தின் கோட்டையாகும். 1980-ல் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதி. 1981 முதல் 1991 வரை இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தி எம்பியாக இருந்த தொகுதி. 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் 1996, 1999 தேர்தல்களில் அவரது மனைவி சோனியா காந்தி போட்டியிட்டு வென்றார். 2004, 2009, 2014 லோக்சபா தேர்தல்களில் சோனியா காந்தி மகன் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதி அமேதி. ஆனால் 2019- லோக்சபா தேர்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்றுப் போனது காங்கிரஸை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ராகுல் காந்தி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதியில் தோல்வி அடைந்தார் ராகுல் காந்தி. தற்போது வயநாடு தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் ராகுல் காந்தி. இம்முறையும் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில்தான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
சோனியா காந்தி: ராகுல் காந்தி, நேரு குடும்பத்தின் பாரம்பரியமான அமேதி தொகுதியை கைவிட்ட நிலையில் தற்போது சோனியா காந்தி ரேபரேலி தொகுதியை கைவிட்டு விட்டார். ராஜஸ்தான் மாநில்த்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக முடிவு செய்துள்ளார் சோனியா.
மாமியாரை தொடர்ந்து: சோனியாவின் மாமியார் இந்திரா காந்தி அம்மையார் 1964-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார் இந்திரா காந்தி அம்மையார். தற்போது நேரு குடும்பத்தில் இந்திரா காந்தியை தொடர்ந்து 2-வது நபராக சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாகிறார்.
பிரியங்கா காந்தி: உ.பி.யில் நேரு குடும்பத்தின் கோட்டைகளில் ஒன்றான அமேதியை ராகுல் காந்தி காலி செய்து விட்டார். சோனியா காந்தி மற்றொரு கோட்டையான ரேபரேலியில் போட்டியிடப் போவதில்லை. அதேநேரத்தில் ரேபரேலி தொகுதியில் மகள் பிரியங்கா காந்தியை சோனியா காந்தி நிறுத்தக் கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேபரேலியில் சோனியா காந்திக்கு கிடைத்த பேரனுதாபமும் ஆதரவு அலையும் பிரியங்கா காந்திக்கு அப்படியே கிடைக்குமா? அல்லது அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கிடைத்த ரிசல்ட்தான் பிரியங்கா காந்திக்கும் கிடைக்குமா? என்ற பதற்றத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications