மோடியின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு.. பிரதமர் வீடு முதல் பாஜக அலுவலகம் வரை.. திட்டமிட்ட அமித் ஷா!
டெல்லி : நாளை மாலை 4 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பாஜகவின் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில், மே 1ஆம் தேதி 7வது கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் நீண்ட நாட்களாக நடத்தப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பெரும்பாலும் பாஜக ஆட்சியே மீண்டும் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. சில நிறுவனங்கள் பாஜக 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஏற்கனவே தொடர்ச்சியாக இரு முறை நரேந்திர மோடி பிரமராக இருந்த நிலையில், 3வது முறையாகவும் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக 300 தொகுதிகளில் வென்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர். வட இந்தியா மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் பாஜகவின் வளர்ச்சி இருக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாளை லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படவுள்ள நிலையில், 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதன்பின் நாளை மாலை 4 மணிக்கு பாஜகவின் வெற்றிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வீட்டில் இருந்து டெல்லி பாஜக அலுவலகம் வரை நரேந்திர மோடியின் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் பலத்தை நிரூபிப்பதை கொண்டாடும் வகையில் இந்த பேரணி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications