வருமான வரி.. வங்கி கணக்கு.. 'ஒன்பது கிரகமும் உச்சத்தில்'.. காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரிய சிக்கல்
டெல்லி: வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரச்சாத்திற்கு கூட செல்ல முடியாத அளவிறகு சிக்கலை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிதிச் சிக்கலால் மாநிலங்களுக்கான நட்சத்திர பரப்புரையாளர்களை கூட இதுவரை அறிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
2018-19 மதிப்பீட்டுஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வருவாயானது ரூ.199 கோடிக்குமேல் இருந்த நிலையில், ரூ.100 கோடி வரி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு வருமான வரித்துறைநோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த விவகாரத்ல் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. இதை எதிா்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை வருமான வரித்துறை தீா்ப்பாயம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து டெல்லி உயா்நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த வருமான வரித்துறை 'வருமான வரித்துறை எந்தவொரு சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை. 2014-15, 2015-16 மற்றும் 2016-17-ஆம் ஆண்டுகளில் காங்கரஸ் கட்சிக்கு வந்துள்ள கூடுதல் வருவாய்க்கு உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. கட்சிக்கு கிடைத்துள்ள ரூ. 520 கோடிக்கு மேலான வருமானம் கணக்கில் வரவில்லை. எனவே, மறுமதிப்பீடு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியது. இதைக் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'வருமான வரி சட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய போதிய ஆதாரங்களை வருமான வரித்துறை சமா்ப்பித்துள்ளது' என்று குறிப்பிட்டு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது காங்கிரஸ். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1ம் தேதி நடக்கவுள்ளது. அப்போது தான் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம் ரத்தாகுமா இல்லையா என்பது தெரியும். அதேநேரம் தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை பாஜக அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி முடக்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரச்சாத்திற்கு கூட செல்ல முடியாத அளவிறகு சிக்கலை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிதிச் சிக்கலால் மாநிலங்களுக்கான நட்சத்திர பரப்புரையாளர்களை கூட இதுவரை அறிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தேர்தல் செலவுகளை அந்தந்த காங்கிரஸ் மாநிலா தலைமை செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்குவார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications