யார் நேர்மையாளர்? மோடியா ராகுலா? நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
டெல்லி: மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்புகளில் யார் நேர்மையாளர் மோடியா இல்லை ராகுலா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்று வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. 518 லோக்சபா தொகுதிகளுக்கு 21 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்த வகையில் யார் யார் சிறந்த தலைவர் மோடியா இல்லை ராகுலா என கேள்வி எழுப்பப்பட்டது. அதில் சில காரணிகளை அடிப்படையாக கொண்டு கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த காரணிகள்- நேர்மையாளர், கடின உழைப்பாளி, மக்கள் நலனில் அக்கறை உள்ளவர், வலிமையான தலைவர், இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்ற 5 காரணிகள் கொடுக்கப்பட்டன. இவை எல்லாவற்றிலும் யார் வெற்றி பெற்றது தெரியுமா,
முதலில் மோடிக்கு வந்த வாக்குகளை பார்ப்போம். நேர்மையாளர் என 73 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். அவர் கடின உழைப்பாளி என 69 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என 71 சதவீதம் பேரும் வலிமையான தலைவர் என 67 சதவீதத்தினரும் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை கொண்டவர் என 68 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
அது போல் ராகுலுக்கு வந்த வாக்குகளை பார்க்கலாம். ராகுல் நேர்மையாளர் என 27 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர். அவர் கடின உழைப்பாளி என 31 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என 29 சதவீதம் பேரும் வலிமையான தலைவர் என 33 சதவீதத்தினரும் இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை கொண்டவர் என 32 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
இந்த இரு சதவீதங்களையும் வைத்து பரார்த்தால் மோடிதான் சிறந்த தலைவர் என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது. நேர்மையாளர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு கிடைத்த வாக்குகளில் 50 சதவீதம் கூட ராகுலுக்கு கிடைக்கவில்லை, அது போல் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்ற கருத்து கணிப்பிலும் மோடி பெற்ற வாக்குகளில் 50 சதவீதம் கூட ராகுல் பெறவில்லை.
வலிமையான தலைவர் பிரதமர் மோடி என்றே குறிப்பிட்டுள்ளார். ராகுலுக்கு 33 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பிரதமர் மோடியும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தியும் போராடி வருகிறார்கள்.
இந்த கருத்துக் கணிப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம். எனவே இந்த சட்டத்தால் தேர்தல் முடிவுகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications