டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் கட்ட வாக்குப் பதிவு.. 81 சதவீதத்துடன் திரிபுரா பெஸ்ட்.. பீகார்தான் இருப்பதிலேயே வொர்ஸ்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் கட்ட வாக்குப் பதிவில் திரிபுரா தான் முதலிடம்- வீடியோ

    டெல்லி: முதல்கட்ட மக்களவை தேர்தலில் திரிபுராவில் தான் நாட்டிலேயே மிக அதிகப்படியாக 81.80 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளார்கள் வாக்கு எந்திரம் கோளாறு காரணமாக நள்ளிரவை தாண்டி வாக்குப்பதிவு நடந்த ஆந்திராவில் 76.29 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு, 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு நேற்று நடந்து முடிந்தது.

    இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 81.80 சதவீதம் வாக்குகள் பதிவானது. நாட்டிலயே குறைந்த பட்சமாக பீகாரில் 50 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    கோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க... ஓட்டு போடுங்க ப்ளீஸ்... கட்சியினர் கெஞ்சல் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போகாதீங்க... ஓட்டு போடுங்க ப்ளீஸ்... கட்சியினர் கெஞ்சல்

     உத்தரப்பிரதேசம்

    உத்தரப்பிரதேசம்

    மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், 2 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடந்தது. இங்கு 81 சதவீதம் வாக்குகள் பதிவானது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. இங்கு 81 சதவீதம் வாக்குகள் பதிவானது.

     தெலுங்கானா

    தெலுங்கானா

    ஆந்திராவில் 25 தொகுதிகளுக்கு நடந்த மக்களவை தேர்தலில் கடும் வன்முறைகளுக்கு இடையேயும், 76.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இங்கு கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 74.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. தெலுங்கானாவில் 17 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒடிசாவில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    சத்தீஸ்கர்

    சத்தீஸ்கர்

    மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 56 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கும், சத்தீஷ்கரில் மொத்தம் உள்ள 11 தொகுதிககளில் ஒரு தொகுதிக்கு மட்டுமே தேர்தல் நடந்தது.

    அஸ்ஸாம்

    அஸ்ஸாம்

    ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 54.49 சதவீதம் வாக்குகள் பதிவானது. அஸ்ஸாமில் 5 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது.

     அருணாச்சல்

    அருணாச்சல்

    மிசோரமில் 2014ம் ஆண்டை விட 1.95 சதவீதம் அதிகமாக வாக்குகள் பதிவாகி இருந்தது. நாகலாந்தில் 78 சதவீதமும், சிக்கிமில் 69 சதவீதமும், மணிப்பூரில் 78.20 சதவீதமும் மேகாலயாவில் 67.16 சதவீதமும், அருணாச்சலில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவானது. யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபாரில் 70.67 சதவீதமும், லட்சத்தீவில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

    English summary
    Lok Sabha elections Phase 1: Tripura records highest polling of 81.80%, Bihar recorded lowest in 50 per cent
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X