நேரு குறித்து வாயை விட்ட பாஜக எம்பி! அப்படியே முடங்கிய மக்களவை.. காங்., எம்பிக்கள் அமளி!
டெல்லி: சீன அத்துமீறல் விவகாரம் குறித்து, முன்னாள் ராணுவ ஜெனரல் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசியிருந்தது சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்க, நேருவை பற்றி பாஜக எம்பிக்கள் பேச தொடங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மாலை 5 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து, முன்னாள் ராணுவ ஜெனரல் முகுந்த நரவனே எழுதிய புத்தகத்திலிருந்து, சில தகவல்களை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, முன்னாள் பிரதமர் நேரு குறித்து சில புத்தகங்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அவைத்தலைவர் அனுமதிக்காமல் இருந்த நிலையிலும் அவர் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை மாலை 5 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications