1946க்கு பிறகு, வரலாற்றில் முதல்முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல்! ஓம் பிர்லா VS சுரேஷ் போட்டி
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து "இந்தியா" கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி போட்டியின்றி தேர்வு செய்ய மத்திய அரசு எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. லோக்சபா துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கூட்டணி விட்டுத் தர மறுத்து அடம்பிடித்ததால் சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணியும் களமிறங்கி உள்ளது. சுதந்திர இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும்.

ராஜ்நாத் சிங் திடீர் பேச்சுவார்த்தை: இந்த நிலையில் நேற்று வரை லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் திமுகவின் டிஆர் பாலு, காங்கிரஸின் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை சபாநாயகர் பதவி: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குடனான பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வலியுறுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மத்திய அரசும் பிரதமர் மோடியும் அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
ஓம் பிர்லா: இந்தப் பின்னணியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக்சபா சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா நிறுத்தப்படுகிறார். 17-வது லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தவர் ஓம் பிர்லா. அவர்தான் 115 எதிர்க்கட்சிகளின் எம்பிக்களை கூண்டோடு சஸ்பெண்ட் செய்தவர். இதனால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஓம் பிர்லா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி: இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), லோக்சபா சபாநாயகர் தேர்தலில் களமிறக்கி இருக்கிறது. 8 முறை எம்பியான இவருக்குதான் லோக்சபா தற்காலிக சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கொடிக்குன்னில் சுரேஷுக்கு இந்த வாய்ப்பைத் தரவில்லை. கொடிக்குன்னில் சுரேஷ் என்பதால் தற்காலிக சபாநாயகர் வாய்ப்பை தரவில்லை என "இந்தியா" கூட்டணி தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷ் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications