ஆக.10ல் பிரதமர் மோடி மவுனம் கலைப்பு! லோக்சபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஆக. 8 முதல் விவாதம்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது லோக்சபாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் மீதான விவாதங்களுக்கு ஆகஸ்ட் 10-ந் தேதி பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
மணிப்பூரில் 3 மாதங்களாக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசு மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது அக்கட்சிகளின் வலியுறுத்தல்.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பதைக் கண்டித்தும் விளக்கம் தர கோரியும் நாடாளுமன்றத்தை கடந்த 9 நாட்களாக எதிர்க்கட்சிகள் முடக்கி உள்ளனன.
இதனிடையே பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பாக காங்கிரஸின் கவுரவ் கோகாய், லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இந்த தீர்மானத்தை ஏற்பதாகவும் அறிவித்தார். ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது எப்போது விவாதம் நடைபெறும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதுவும் பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில்தான் லோக்சபாவில் வரும் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10-ந் தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications