உடல் முழுக்க ரத்த கட்டிகள்.. கொரோனா நோயாளிகள் உடலில் ஏற்பட்ட மாற்றம்.! அரண்டுபோன ஆய்வாளர்கள்!
குடெல்லி: உலகெங்கும் கொரோனா எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே கொரோனா நோயாளிகளின் உடலில், குறிப்பாக லாங் கோவிட் உள்ளவர்கள், ரத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடலில் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதுவே மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் நீண்ட காலம் தொடர காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மேசமான பாதிப்பு ஏற்பட்டது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா ஒட்டுமொத்தப் பூமியையும் முடக்கிப் போட்டது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எல்லா நாடுகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சில ஆண்டுகள் உலக பொருளாதாரமே சரிந்தது.

கொரோனா பாதிப்பு
இதே நிலை தான் சில ஆண்டுகள் வரை நீடித்தது. கொரோனா வேக்சின், தனிமைப்படுத்தும் நடவடிக்கை எனப் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகே கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வந்தது. அதேநேரம் இன்னுமே கூட கொரோனா முழுமையாக அழிந்துவிட்டது எனச் சொல்ல முடியாது. ஆங்காங்கே கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க லாங் கோவிட் குறித்த ஆய்வுகளும் நடந்து வருகிறது. வழக்கமான கொரோனா பாதிப்பு என்பது சில நாட்களில் சரியாகிவிடும். அதாவது வைரஸ் நமது உடலுக்குள் வந்தால் சில நாட்களில் அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும் அதன் பிறகே அவை மெல்லப் போய்விடும். லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலானோருக்கு இதுதான் நடக்கும்.
லாங் கோவிட்
ஆனால், சிலருக்கு மட்டும் லாங் கோவிட் ஏற்படும். அதாவது அவர்களுக்குச் சோர்வு, மந்தம், உடல் வலி, மூச்சுத்திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும். சில வாரங்களில் மறைய வேண்டிய அறிகுறிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடிக்கும். இதைத் தான் லாங் கோவிட் என்கிறார்கள். இது அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் அளவுக்கு மோசமாக இருக்கும்.
இந்த லாங் கோவிட் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து குழப்பம் இருந்து வந்தது. இதற்கிடையே இந்த ஆய்வில் லாங் கோவிட் உள்ளவர்களின் உடலில் ரத்தக் கட்டிகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ரத்த கட்டிகள்
குறிப்பாக லாங் கோவிட் நோயாளிகளின் உடலில் மைக்ரோக்லாட்ஸ் எனப்படும் மிகச் சிறியளவிலான ரத்தக் கட்டிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், மேலும், இது நியூட்ரோபில் எனப்படும் நோயெதிர்ப்பு செல்களையும் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நியூட்ரோபில் செல்கள், DNAவை வெளியிட்டு, நியூட்ரோபில் எக்ஸ்ட்ராசெல்லுலர் டிராப்ஸ் (NETs) என்ற அமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த NETs தான் நோய்க்கிருமிகளை அழிக்கும் வேலையைச் செய்கின்றன..
இந்த மைக்ரோக்லாட்ஸ் மற்றும் NETs ஆகியவை சேர்ந்து தான் லாங் கோவிட்டை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எச்சரிக்கை
இத்தனை காலம் லாங் கோவிட் ஏன் ஏற்படுகிறது என்றே தெரியாமல் இருந்த நிலையில், இப்போது அந்த மர்மத்திற்கான பதில் கிடைத்துள்ளது.. அடுத்து அவர்களுக்குத் தேவைப்படும் புதிய சிகிச்சைகளை உருவாக்க உதவும். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும் கூட அதன் அச்சுறுத்தல் முழுமையாக இன்னும் நீங்கவில்லை என்பதைக் காட்டும் விதமாகவே இது இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications