டெல்லி சாரதாவை துண்டு துண்டாக வெட்டிய காதலன்.. லவ் ஜிஹாத் என புயலை கிளப்பும் பாஜக! பகீர் புகார்
டெல்லி: டெல்லி சாரதா படுகொலை நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக சில பகீர் புகாரை அளித்து உள்ளது
தலைநகர் டெல்லியில் சாரதா என்ற 26 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.
கொலை செய்த பின்னர், குற்றவாளி செய்த காரியங்கள் குறித்த தகவல்கள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாஜகவும் புதிய குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளது.

மும்பை
முதலில் மும்பையில் சாரதா என்ற பெண்ணுக்கு அப்தாப் அமீன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது விரைவில் காதலாக மாறவே இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி சாரதா லிவ்-இன் உறவில் வாழ்ந்துள்ளார். இதற்கிடையே அவர்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து மெஹ்ராவுளி பகுதியில் ஒன்றாக இருந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனை அவர் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

படுகொலை
இப்படி ஒரு முறை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கடந்த மே மாதம் சாரதாவை அமீன் கொலை செய்துவிட்டார். அதன் பின், தனது காதலியின் உடலை 35 பகுதிகளாக வெட்டிய அமீன், பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பாகங்களாகத் தினமும் வெளியே எடுத்துச் சென்று போட்டுள்ளார். இந்த கொடூரம் நடந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

லவ் ஜிகாத்
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சாரதாவின் தந்தை "லவ் ஜிகாத்" காரணமாகத் தனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே பாஜக தலைவர்களும் "லவ் ஜிகாத்" கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "நம் நாட்டில் 'லவ் ஜிஹாத்' ஒரு மிஷனாகவே இயங்கி வருவதாகவும், எனவே அதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடினார்.

பாஜக தலைவர்கள்
இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மேலும் கூறுகையில், "அந்த மும்பை பெண் கொலை செய்யப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. நம் நாட்டில் 'லவ் ஜிகாத்' ஒரு மிஷனாக நடத்தப்படுகிறது. இந்து பெண்களைக் காதல் என்ற பெயரில் ஏமாற்றி, பின்னர் அவர்களைப் பரிதவிக்க விட்டுச் செல்வதும் கொலை செய்வது விடுவதும் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நாம் விசாரிக்க வேண்டும்" என்றார்.

பின்னணியில் யார்
அதேபோல பாஜக எம்எல்ஏ ராம் கதம் கூறுகையில், "அந்த பெண் கொலை செய்யப்பட்டுத் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் கேட்டு நாடே சோகத்தில் உள்ளது. இந்த கொலையில் லவ் ஜிகாத் கோணத்திலும் டெல்லி போலீசார் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம். இதற்குப் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து விசாரிக்க வேண்டும்..

அதிகரிக்கும் லவ் ஜிகாத்
இந்த சம்பவம் கொலை வழக்கு மட்டுமல்ல, லவ் ஜிகாத் வழக்கும் கூட. இது பற்றிய விவரங்களைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.. நம் நாட்டில் லவ் ஜிகாத் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் போலீசார் இந்த வழக்கைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

தந்தை புகார்
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சாரதாவின் தந்தை கூறுகையில், "இது லவ் ஜிகாத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அப்தாபை தூக்கில் போடுங்கள். டெல்லி போலீசார் நடத்தும் விசாரணை சரியான திசையில் செல்லும் என்று நம்புகிறேன். சாரதா என்னிடம் அதிகம் பேசியதில்லை. கொலையாளி உடன் நான் ஒரு போதும் பேசியதில்லை. அவர் மீது கடும் நடவடிக்கை தேவை" என்றார்.












Click it and Unblock the Notifications